தமிழகத்தில், பா.ஜ.க, வின் செல்வாக்கு பரவலாக அதிகரித்து, மூன்றாவது பெரியகட்சியாக உருவெடுத்துள்ளது,'' என்று , மக்கள் ஆய்வகம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளதாக, பேராசிரியர் ராஜ நாயகம் தெரிவித்தார்.

மக்கள் ஆய்வகம் சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது, ராஜ நாயகம் கூறியதாவது: இம்மாதம், 7ம் தேதி முதல் 20ம் தேதிவரை நகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் கருத்தைக் கேட்டோம். மாநில அளவில், 3,320 பேரிடமும், ஸ்ரீரங்கத்தில், 1,530 பேரிடமும் கருத்து கேட்க பட்டது. இதில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனை கடுமை என்று, 53 சதவீதம் பேரும், எதிர்பார்த்ததுதான் என, 14 சதவீதம் பேரும், எதிர்பாராதது என, 30 சதவீதம்பேரும் கருத்துத் தெரிவித்து உள்ளனர்.

தண்டனையைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு அனுதாபம் அதிகமாகி, அதிமுக., வெற்றி பெறும் என, 31 சதவீதம் பேரும், அ.தி.மு.க.,வுக்கு சரிவு உருவாகும் என, 24 சதவீதம் பேரும், மாற்றம் எதுவும் இருக்காது என, 25 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர் . நடிகர்கள் ரஜினி, விஜய் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவதையும், அவர்கள் தனிக்கட்சி துவங்கினால், ஆதரவு அளிப்பதாகவும், மிகச் சொற்ப மானவர்களே விரும்புகின்றனர். பொதுவாக, தற்போதை நிலையில், தமிழகத்தில் அதிமுக., 43, தி.மு.க., 26, பா.ஜ., 9 சதவீதத்துடன் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

தமிழகத்தில், சிலகுறிப்பிட்ட பகுதிகளில் மட்டும், ஆதரவுபெற்று இருந்த பா.ஜ., தற்போது, மாநிலத்தில் பரவலான செல்வாக்கைப் பெற்று, மூன்றாவது பெரியகட்சியாக உள்ளது. ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடந்தால், அ.தி.மு.க., வெற்றிபெறுவதை தவிர்க்க முடியாது என்றும் கருத்துக்கணிப்பு மூலம் தெரிய வருகிறது. என்று , அவர் கூறினார்.

Leave a Reply