பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கிராமங்களை தத்துஎடுத்து, அவற்றை மாதிரி கிராமங்களாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டார். அவரது வேண்டுகோளை ஏற்று எம்.பி.க்கள் கிராமங்களை தத்து எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் நாக்பூர் தொகுதி எம்.பி.யும், மத்திய தரை வழி போக்குவரத்து மற்றும் கப்பல்துறை மந்திரியுமான நிதின் கட்காரி நாக்பூரில்

இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பச்காவ் கிராமத்தை தத்து எடுத்து உள்ளார்.

இந்த கிராமத்தில் 4 ஆயிரத்து 923 மக்கள்தொகை உள்ளது. அங்குள்ள 761 வீடுகளில் 454 வீடுகளில் மட்டுமே கழிவறை உள்ளது. பச்காவ் கிராம தத்து எடுப்பு விழாவில் பங்கேற்க நிதின்கட்காரி, அந்த கிராமத்துக்கு சென்றார். அப்போது அவருக்கு கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். வரவேற்க ஏராளமான கிராம மக்களும் திரண்டுவந்தனர்.

இதைத்தொடர்ந்து நடந்த விழாவில் நிதின் கட்காரி பேசுகையில், ''இந்தகிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கழிவறைகட்ட தலா ரூ.12 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இங்கு முக்கிய விவசாய பயிராக பருத்தி மற்றும் காலிபிளவர் விளங்குகிறது. காலிபிளவர் விவசாயிகள் நலனுக்காக குளிரூட்டப் பட்ட கிடங்கி அமைக்கப்படும். மேலும் ரூ.25 லட்சம் செலவில் சமுதாயக் கூடம், ரூ.10 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் என்றார் .

Leave a Reply