இலங்கை நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழக மீனவர்களின் விடுதலைக்காக பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளுக்கு துணை நின்று வெற்றிபெற்ற வெளியுறவுதுறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில்சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களின் படகுகளையும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட 16 மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் என சுஷ்மா சுவராஜ் உறுதி தந்தார் .

சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்காரியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் தமது துறை ரீதியான வளர்ச்சிப்பணிகள் பற்றி விவாதித்தார் என்று மத்திய சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது :–

Leave a Reply