ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில், 6 மாநகராட்சிகளில் 5-ல் பா.ஜ.க தனிபெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. 11 மாநகர சபைகளையும், 15 நகராட்சிகளையும் பா.ஜ.,கட்சி கைப்பற்றி உள்ளது.

இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உதய்ப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 வார்டுகளில், 49-லும், கோட்டா மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 57-லும் பாஜக வெற்றிபெற்றுள்ளது. இதேபோல், ஜெய்ப்பூர் மாநகராட்சியில் 65 வார்டுகளிலும் (மொத்தம் 91), ஜோத் பூர் மாநகராட்சியில் 39 வார்டு களிலும் (மொத்தம் 65), பிகானீர் மாநகராட்சியில் 35 வார்டுகளிலும் (மொத்தம் 60) பா.ஜ.க வென்றுள்ளது.

18 மாநகர சபைக ளில் 11-ம், 22 நகராட்சிகளில் 15-ம் பா.ஜ.க வென்றுள்ளது. 5 மாநகர சபை களையும், 2 நகராட்சிகளையும், காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

Leave a Reply