பிரதமர் நரேந்திரமோடியின் கனவு திட்டங்களுள் இந்தியாவில் புல்லெட் ரெயிலை கொண்டுவர வேண்டும் என்பதும் ஒன்று. இதன்படி டெல்லி–சென்னை இடையே புல்லட் ரெயில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தண்டவாளம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த இந்திய ரெயில்வே உயர் அதிகாரிகள் குழுவினர் 24–ந் தேதி சீனா சென்றனர் .

சீனாவின் தலைநகரான பீஜிங் மற்றும் குவாங்ஸோ மாகாணத்தின் இடையே இரண்டாயிரத்து 298 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்புப் பாதையில் அதிநவீன புல்லட் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மணிக்கு சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் இந்த புல்லட்ரெயில்கள், இப்பாதையின் ஒட்டுமொத்த தூரத்தையும் எட்டே மணி நேரங்களுக்குள் கடந்துவிடுவதால், உலகிலேயே மிகவும் நீளமான புல்லட் ரெயில் சேவையாக இது கருதப்படுகின்றது.

சாதாரணமாக ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்தடம் அமைக்க ரூ.5 கோடி செலவு ஆகும். அதுவே புல்லட் ரெயிலுக்கான தடம் என்றால் ரூ.126 கோடி வரை செலவுபிடிக்கும்.இந்த புல்லட் ரெயில் தடத்தை பிரான்சு,ஜெர்மனி ஜப்பான், போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சீனா அமைத்து தந்தால் 30 சதவீதம் மலிவாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சென்னை-டில்லிக்கு புல்லட் ரெயில் பாதை அமைத்து அதில் ரயில் இயக்கப் பட்டால் சென்னையில் இருந்து டில்லிக்கு 7 மணி நேரத்தில் சென்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply