பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியாவில் புதியசகாப்தம் தொடங்கியுள்ளது என்று அமெரிக்க துணை அமைச்சர்கள் இருவர் கருத்துதெரிவித்தனர்.

பொது மக்கள் பாதுகாப்பு, ஜன நாயகம், மனித உரிமை துறைகளின் துணை அமைச்சர் சாராஸ்வெல், தெற்கு ஆசிய பகுதிக்கான வெளியுறவு துணை அமைச்சர் அதுல்கேஷப் ஆகியோர், தலை நகர் வாஷிங்டனில் உள்ள வெளிநாட்டு நிருபர்கள் மையத்தில் ஞாயிற்றுக் கிழமை பேசும் போது இவ்வாறு தெரிவித்தனர்.

அதன்விவரம்: நரேந்திர மோடி மிகுந்த நம்பிக்கையும் ஆற்றலும் வெளிப்படை தன்மையும் கொண்டவராக உள்ளார். பொருளாதார முன்னேற்றத்தை குறித்து திட்டமிட்டுவரும் அதே வேளையில், சமூகத்தில் வெளிப்படை தன்மையையும் வலியுறுத்தி வருகிறார். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றம் குறித்தும் அவர் அக்கறை கொண்டுள்ளார் என்றார்

Tags:

Leave a Reply