இந்தியாவிலிருந்து அண்டை நாடான நேபாளத்துக்கு செல்ல விரும்புபவர்கள் விமானத்தில் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலையை மாற்றி மத்திய அரசு நேபாளத்துக்கு பேருந்தை தொடங்கியுள்ளது.

இந்த சேவையை மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.இந்த சொகுசு பேருந்தின்மூலம் டெல்லியில் இருந்து நேபாள தலை நகர் காத்மாண்டுவுக்கு இடையில் உள்ள ஆயிரத்து 250 கிலோ மீட்டர் தூரத்தை 30 மணி நேரங்களுக்குள் கடந்துசெல்ல முடியும்.

நவீன வகை பெருந்துகலான 'வால்வோ' மற்றும் 'மெர்செ டெஸ்' பேருந்துகள் நேபாளத்திலிருந்து டெல்லிக்கு ஒன்றும், டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு ஒன்றும் என ஒரேநாளில் இரு மார்க்கங்களில் இயக்கப்படும்.

டெல்லியில் இருந்து காத்மாண்டு செல்லவும், அங்கிருந்து டெல்லிக்குவரவும் ஒருவழி டிக்கெட் கட்டணம் 2 ஆயிரத்து 300 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்துபுறப்படும் பேருந்துகள் யமுனா விரைவு நெடுஞ்சாலை, ஆக்ரா, பிரோஸாபாத், கான்பூர், லக்னோ, கோரக்பூர், சுனவ்லி பகுதி வழியாக இந்தியாவை கடந்து, நேபாளத்துக்குள் நுழைந்து தலைநகர் காத்மாண்டுவை சென்றடையும்.

டெல்லி அம்பேத்கர் ஸ்டேடியத்தில் இந்த முதல்பேருந்து சேவையை கட்காரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதேவேளையில், நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்தபடி, எதிர் திசையில் இருந்து காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு வரும் முதல்பேருந்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Leave a Reply