சமையல் காஸ் மானியம் ரத்து செய்யப் படாது என்று மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

சமையல்காஸ் மானியத்தை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.

இந் நிலையில் வசதி படைத்த வர்களுக்கு சமையல் காஸ் மானியத்தை ரத்துசெய்வது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி அண்மையில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியது .

இதுகுறித்து மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியபோது, சமையல் காஸுக்கு வழங்கப்படும் மானியத்தை உடனடியாக ரத்துசெய்யும் திட்டம் இல்லை என்று தெரிவித்தார்

Tags:

Leave a Reply