ஒரு கல்யாண மண்டப வாசல். கல்யாணத்துக்கு வந்திருந்த ஒரு கல்லூரி மாணவர் தனது வகுப்பில் படிக்கும் ஒரு நண்பனுக்கு கம்யூனிஸ்ட் துண்டறிக்கை ஒன்றைக் காட்டுகிறார். அதில் லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாசேதுங் என்று கம்யூனிஸ்டு பிரபலங்களின் படங்கள் மட்டுமே இருந்தன. அந்த இரு கல்லூரி மாணவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். 'நம்ம நாடு ஆசாமி ஒருத்தன் கூட இல்லையா அவங்க கட்சியில? எல்லாம் இறக்குமதி சரக்கா இருக்கே?

இந்தியாவில் கம்யூனிஸ்டு இயக்கம் காணாமல் போய்க் கொண்டிருப்பதன் காரணங்களை விமர்சகர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு கல்லூரி மானவர்களுக்கும் காரணம் தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது.

'பாரதம் என்ற ஒரு நாடு இருக்கிறது. அதற்கு என ஆன்மா போல தொன்மையான கலாச்சாரம் இருக்கிறது. அந்த கலாச்சாரத்தின் பலத்தில் உலகத்திற்கே நல்ல வழி காட்டு என்று இறைவனால் படைக்கப்பட்ட தேசம் இது'. இந்த விஷயம் எதுவும் அறவே தெரியாமல் போய்விட்டது கம்யூனிஸ்டுகளுக்கு. எனவே இந்த தேசம் செஞ்சட்டையை சீந்துவாரில்லாத நிலைக்கு கொண்டு வந்துவிட்டது.

முகமது அலி ஜின்னா ஹிந்துஸ்தானம், பாகிஷ்தானம் என்று இரண்டு தேசங்கள் தேவை என்று இரு தேச சித்தாந்தம் பேசியபோது அதை தீவிரமாக ஆதரித்தவர்கள் கம்யூனிஸ்டுகள் . "பாகிஸ்தானை அடையும் லட்சியத்துக்காக போராடும் முஸ்லிம் லீகில் சேரும்படி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதன் தொண்டர்களுக்கு உத்தரவிட்டது" என்று மூத்த கம்யூனிஸ்டு பிரமுகர் போகேந்திரஜா தெரிவித்தார். பல ஊர்களில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கம்யூனிஸ்டுகள் கோஷம் போட்டார்கள். இதெல்லாம் நடந்தது 1943 முதல் 1947 வரை.

திரிபுராதான் கம்யூனிஸ்டுகள் ஆளும் ஒரே மாநிலம். அங்கு பாப்டிஸ்டு கிறிஸ்தவ அமைப்பு CPMக்கு ஆதவவாக இருந்தது. அண்மையில் ஒரு இடைத் தேர்தலில் அந்த சர்ச் கம்யூனிஸ்டுகளை ஒதுக்கிவிட்டது. மாநில CPM பொதுச் செயலாளர். உடனே, 'அமெரிக்க சிஐஏவின் எடுபிடிகள் இவர்கள்' என்று கூக்குரலிட்டார். ஏதோ இத்தனை நாள் தெரியாதது போல! திருடனுக்குத் தேள் கொட்டின கதைதான்!!

பொதுவுடைமை என்ற பொருளாதார கோஷம் தேச மக்களை ஈர்த்து விடவில்லை. அதன் போலிக் கவர்ச்சிக்கு இரையாகி கம்யூனிஸ்டுகளை நேசித்தவர்கள் அவசர அவசரமாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.

கம்யூனிஸ்டு கட்சிகளிலிருந்து ஓட்டம் எடுப்பவர்கள் அதிகம். வந்து சேர்பவர்கள் சொற்பம். 2012, 2013 ஆகிய இரண்டு ஆண்டுகளில் டெல்லியில் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தவர்கள் வெறும் 32 பேர். CPM கோட்டையாக இருந்து மேற்கு வங்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 2௦௦8 தோழர்கள் கட்சி உறுப்பினர் அட்டையை கிழித்தெறிந்துவிட்டு கொட்டைகளை மீட்டெடுக்க சீதாராம் எச்சூரியும் பிரகாஷ் காரத்தும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் கண்ட பலன் இதுதான்.

குறிப்பாக CPM கட்சி தனது 50வது ஆண்டை அடுத்த ஏப்ரலில் கொண்டாட இருக்கும் நிலையில், அதன் முன் உள்ளது வாழ்வா சாவா பிரச்சினை. எங்களது பொன்விழா தருணத்தில் நாங்கள் பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிப்போம் என்று தோழர்கள் அளக்கிறார்கள். ஆனால் இந்தனை நாள் கம்யூனிஸ்டு தலைவர்கள் கட்சியைப் படுகுழியில் தள்ளிய பரிதாபத்தை மழுப்புவது எப்படி என்பதுதான் இவர்கள் செய்யக்கூடிய வேலை என்பது தெளிவாகிவிட்டது.

வடசென்னையில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி முழுவதிலும் கம்யூனிஸ்டுகள் போராட்டம் என்ற பெயரில் ஆலைகளை மூடச்செய்து தொழிலாளர்கள் குடும்பங்களின் வயிற்ரெறிச்சலை கொட்டிக் கொண்டார்கள்.

கன்யாகுமரி மாவட்டத்தில் கேரளத்தின் கண்ணூர் ஸ்டைலில் அழித்தொழிப்பு வாலாட்டம் நடத்திப் பார்த்த கம்யூனிஸ்டுகள் பொதுமக்களின் உக்கிரமான பதிலடியால் சுருண்டார்கள்.
வனவாசி மக்கள் (பழங்குடியினர்) அதிகம் வசிக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி வட்டாரங்களில் அப்பாவி மக்களை மிரட்டி நக்சலைட்டுகள் கொழுத்த முயன்றது உரிய வேளையில் பொதுமக்கள் பார்வைக்கு வந்து பெரிய அளவிலான ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டன.

"மக்கள் காங்கிரஸ் கட்சியை வெறுத்து ஒதுக்கி, பாஜகவை நம்பாமல் இருந்த கால கட்டத்தில் கூட கம்யூனிஸ்டுகள் லோக்சபாவில் தங்கள் பலத்தை 6௦லிருந்து வெறும் 12க்கு குறைத்துக் காட்டிய சாதனையை கம்யூனிஸ்டு தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்" என்கிறார் ஒரு விமர்சகர். ஆக, இந்திய கம்யூனிஸத்தை குப்பைக் கூடையில் கடாசுவது ஊரறிந்த ரகசியம்.

அடுத்து, வேறு சில நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளை சிலர் ஒப்பிடுகிறார்கள். வியட்நாமைப் பார், சீனாவைப் பார், அவனவன் தன தேசத்தை விட்டுக் கொடுக்காமல் கம்யூனிஸத்தை வளர்க்கவில்லையா என்று சொல்லிக் காட்டுகிறார்கள். அதே மூச்சில், நம் நாட்டு கம்யூனிஸ்டுகள் நம் நாட்டைப்பற்றி எதுவும் தெரியாமல் ஜோசப் ஸ்டாலின் போன பாதையில் கட்சியை கொண்டு போனதால் திண்டாடி தெருவில் நிற்பதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும். பத்தாயிரக் கணக்கில் தோழர்கள் கம்யூனிஸ்டு கட்சிக்கு டாடா சொல்லிவிட்டு, தேசத்தை நன்றாக புரிந்து கொண்ட பாஜக,ஏபிவிபி, பிஎமஎஸ் போன்ற அமைப்புகளில் சேர்கிறார்கள் என்றால் 'குற்றம்' யாருடையது?

இந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கண்ணூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். உடற்பயிற்சி பொறுப்பாளர் மனோஜ், CPM குண்டர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சில மணி நேர்த்தில் மாவட்ட CPM செயலாளர் ஜெயராஜன் மகன் ஜெயின், பேஷ்புக்கில்'தோழர்களே! பாராட்டுகிறேன். இந்த நல்ல செய்தியைக் கேட்க நெடுநாளாக காத்திருந்தேன். பரவசமானேன்" என்று பதிவு செய்தான். கம்யூனிஸ்டுகளின் கோரமுகமும் அந்த முகநூல் பதிவு வாயிலாக தேசத்திற்கு தெள்ளத் தெளிவாக தெரியவந்தது.

மகாத்மா காந்திஜி தலைமையில் சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. இந்திய கம்யூனிஸ்டுகள் சுதந்திரப்போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் அரசுக்குக் காட்டிக் கொடுத்தார்கள். அது மட்டுமல்ல, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பெருந்தலைவர்களை பகிரங்கமாக கேவலப் படுத்தினார்கள்.

தேசம் புரியவில்லை, தேசியம் விளங்கவில்லை; அது சரி மக்கள் மனது கூடவா கம்யூனிஸ்டுகளுக்குப் புரிய வில்லை கட்சியை கை விடுபவர்களை ஒழித்துக் கட்டுவதை ஒரு வாடிக்கையாக கம்யூனிஸ்டுகள் ஆக்கிக் கொண்டதால் ஊராரின் வெறுப்பு பத்து மடங்காயிற்று. கட்சி சுண்டைகாயாய் சுருங்கிப் போனது. இதை தீர்க்க தரிசனத்துடன் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பின்வருமாறு பதிவு செய்து சென்றிருக்கிறார்;

"காரல் மார்க்ஸ்சின் 'தாஸ் கேபிடல்' நூல் வெளிவந்து எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1917ல் பாட்டாளி சர்வாதிகாரம் ஒரு நாட்டில் உருவானது. அது ஒன்றும் தவிர்க்க இயலாத இயக்க விதிகளால் வந்துவிட வில்லை. மாறாக, மிகுந்த வன்முறை, ரத்தம் சிந்துதல் வழியாகவே அடையப்பட்டது. மீதி உலகம் காத்துக் கொண்டிருக்கிறது இவ்வாறு பொதுவாக பொய்த் தவறுகள் என சோஷலிசத்தின் வருகை நிருபிக்கப்பட்டது. மார்க்சியத்தின் இதரச் சித்தாந்த நம்பிக்கைகளும் தர்க்கத்தாலும் அனுபவத்தாலும் தவறு என நிரூபிக்கப்பட்டுவிட்டன."
1989 நவம்பரில் கம்யூனிஸ்டு சொர்க்கம் சிதறியது. மேற்கு, கிழக்கு ஜெர்மனிகளை கம்யூனிஸ்டு சித்தாந்தம் சுவராக நின்று பிரிந்தது. அது இடிந்து விழுந்தது. சோவியத் நாடும் கம்யூனிஸத்தை உதறி ரஷ்யாவாகி பிழைக்கிற வழியை பார்த்துக்கொண்டு போனது. ஒரு சிலர் இந்தியாவில் மட்டும் கம்யூனிஸம் அசைக்க முடியாதபடி நிலை கொண்டு விட்டதாகப் பசப்பி அறிக்கை விட்டார்கள். அத்தனையும் பொய் என்பது நாளுக்கு நாள் நிரூபனமாகி வருகிறது.

காங்கிரசும் கழகங்களும் விமர்சகர்களால் நார் நாராக கிழிக்கப்படுகிறது அவற்றின் வாரிசு அரசியல் காரணமாகத்தான். கம்யூனிஸ்டுகளும் இந்த கேடுகெட்ட குணம் கொண்டவர்கள்தான். உமாநாத் என்றொரு கம்யூனிஸ்டு பிரமுகர் தலை எடுப்பார். அவர்கள் குடும்பத்திலிருந்து பாப்பா உமாநாத் என்று இன்னொரு பிரமுகர் முளைப்பார். இவர்களின் வாரிசுதான் வாசுகி பி.ராமமூர்த்தி பெரிய தோழர் என்றால் வைகை அவ்வளவு பெரிய தோழியர் அல்ல என்றாலும் கூட அப்பா காரணமாக கட்சியில் ஆதிக்கம் செலுத்துவர். பிரகாஷ் காரத் கட்சியின் பொதுச் செயலர் என்பதால் பிருந்தா காரத் தொலைக்காட்சித் தோழியராக வளம் வருகிறார்.

'இந்தியா டுடே' செய்தியாளராக பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யா சென்று பாத்தார். மக்கார் பட்டினியில் வாடுவது பச்சையாத் தெரிந்தது. "கோடிக் கணக்கானவர்களை கொன்று குவித்தார்கள் தோழர்கள். கடைசியில் சோற்றுக்கு இல்லாமல் தவிக்கிறோம்" என்று கர்ப்பிணியான ஒரு ரஷ்யப் பெண் இவரிடம் கண்ணீர் மல்க சொன்னது கம்யூனிஸ்டுகளின் யோக்கியதையை உலகம் முழுவதற்கும் வெளிச்சம் போட்டுக் காட்ட போதுமானதாக இருந்தது.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply