நரேந்திர மோடி தனது தேர்தல் பரப்புரைகளில் 1௦௦ நாளில் வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்பேன் எனவும் அதை இந்தியாவிலுள்ள ஏழை மக்களுக்கு பிரித்து கொடுப்பேன் என்றும் சொன்னாரே.. ஏன் இன்னும் கருப்பு பணத்தை மீட்க வில்லை? இது காங்கிரஸ் கேட்கும் கேள்வி!

தேர்தல் பரப்புரைகளில் இன்றைய 'காமர்ஸ்' வர்த்தக துறை இணை அமைச்சர் அன்றைய பாஜக செய்தி தொடர்பாளருமான திருமதி நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஏன் கருப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிடத் தயங்குகிறது? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்பு பண முதலைகளின் பட்டியலை வெளியிடுவோம் என சூளுரைத்தாரே? இன்னும் ஏன் செய்யவில்லை என ஊடகங்களில் விவாதங்களில் கேட்கப்படுகிறது.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்வதற்கு முன் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ 1 மற்றும் ஐமுகூ 2 அரசுகள் கறுப்புப் பண மீட்புப் பணிகளில் என்ன செய்தது என்பதை நாம் தெரிந்து கொண்டாக வேண்டும்.

2௦௦8 நாடாளுமன்ற தேர்தலிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டு கருப்பு பண பெரும்புள்ளிகள் பெயர்களை வெளியிடுவோம். பணத்தையும் மீட்போம் என சோனியாவிலிருந்து சாதாரண காங்கிரஸ் சோணகிரி வரை பேசினார்கள். ஆனால் செய்தது என்ன? 2௦௦8ம் ஆண்டு சுவிட்சர்லாந்து வங்கியான HSBCயிலிருந்து திருடப்பட்ட பணம் போட்டவர்கள் பெயர்களை பிரான்ஸ் வெளியிட்டது. அதற்கு பிறகு கறுப்புப் பணத்தை மீட்க வேண்டுமென்ற பிரச்சாரம் அதிகமானது. ஆனாலும் ஐமுகூ அரசு தொடர்ந்து மௌனம் காத்தது.

2011 ஜூலை 4 அன்று சுப்ரீம் கோர்ட் ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை நிறுவ வேண்டும் எனவும் அது இப்பணியை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அது மட்டுமல்ல அதன் தலைவராக அன்றைய உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ஜீவன் ரெட்டி பெயரையும் சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்தது. ஆனால் இந்த விவகாரத்தில் கொஞ்சமும் ஆர்வம் காட்டாத காங்கிரஸ் கட்சி கருப்பு பண மீட்பு பணியில் ஒரு துரும்பைக்கூட எடுத்து போடாமால் 3 வருடத்தை ஒட்டியது.

இந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி பொருத்து பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்த சுப்ரீம் கோர்ட்,3 வாரங்களுக்குள் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து பணியை துவக்க வேண்டும் என காங்கிரஸ் அரசுக்கு உத்தரவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பை ரத்து செய்ய வேண்டும் என அதே நாளில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வதி சுப்ரீம் கோர்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த வாரம் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னால் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், 3 வாரங்களுக்குள் ஏன் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க வில்லை என்ற கேள்விக்கு, அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் செய்ய முடியவில்லை என்றும், மாபெரும் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார். இந்திய ராணுவ தளபதி நியமனம், துறைமுக பொறுப்புக் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு துரு உறுப்பினர்களை இதே காலத்தில் காங்கிரஸ் அரசு நியமனம் செய்தபோது அந்த விதிகள் எங்கே போனது?

ஆக மொத்தத்தில், ஐமுகூ 10 ஆண்டு ஆட்சி காலத்தில் கருப்பு பணமீட்பு மற்றும் பெயர் பட்டியல் வெளியீட்டில் ஒரு சிறுதுளி கூட அக்கறை எடுக்கவில்லை என்று ஆதாரபூர்வமாக தெரிகிறது.

இப்போது முதலில் கேட்ட கேள்விகளுக்கான பதிலுக்கு வருகிறேன். பாஜக பெயர் பட்டியலை வெளியிடுவேன் என சொல்லி ஏன் வெளியிடவில்லை? (தற்போது 627 பெயர்கள் வெளியிடப்படுவிட்டன)

இந்த கேள்வியில் பாதி உண்மை மட்டுமே இருக்கிறது. முதலில் இரட்டை வரிவிதிப்பு விலக்கு ஒப்பந்தம் (Double Taxation Avoidance Agreement)என்கிற ஒரு ஒப்பந்தத்தை தெரிந்து கொள்வோம். இதுவே இந்த தாமதத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

இந்தியாவிற்கும் 88 பிற நாடுகளுக்கும் இடையே மேற்கண்ட ஒப்பந்தம் உள்ளது. இதில் ஜெர்மனியும் சுவிச்சர்லாந்தும் அடங்கும். இந்த இரு நாடுகளுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் 1995ம் ஆண்டு கையெழுத்தானது.கையெழுத்திட்டது காங்கிரஸ் ஆட்சியில் இதன்படி கருப்புப்பணம் போட்டவர் பட்டியலை, ஆதாரம் சமர்ப்பித்து, அதில் இருநாடுகளும் திருப்தி அடைந்து, வழக்கு தொடர்ந்து, கோர்டுக்கு வழக்கு வரும் போது மட்டுமே வெளியிடமுடியும். இப்படி ஒப்பந்தம் போட்டவர்கள் காங்கிரஷ்காரர்கள். தாங்கள் ஆட்சியில் இருந்த போது பெயர்பட்டியலை ஏன் வெளியிடவில்லை என்ற கேள்விக்கு, 'இந்த ஒப்பந்த ஷரத்துக்களைதான்' காங்கிரஸ் ஆட்சி காரணம் காட்டியது. இதை தெரிந்து வைத்திரிந்தும் வேண்டும்மென்றே அரசியல் உள்நோக்கத்துடன் "பாஜக அரசு பெயர் பட்டியலை வெளியிட மறுக்கிறது" எனப் பொய் பரப்புகிறது. 10 வருடங்கள் சும்மா இருந்த காங்கிரஸ் அரசு போல பாஜக அரசு இல்லை. பாஜகவின் நம்பகத்தன்மைக்கு இரண்டு உதாரணங்கள் சொல்லலாம்.

ஒன்று ஆட்சி பொறுப்பை ஏற்ற மறுநாள் முதல் மந்திரி சபை கூட்டத்தில் முதல் உத்தரவே "சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்ததுதான். இதே உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் ஐ.பி தலைவர், ரா தலைவர், அமலாக்கபிரிவு இயக்குனர் வெளியுறவுத்துறை, உள்துறை, வருமான வரித் துறை என 13 துறைகளின் செயலர்கள் அடங்கிய குழுவை அமைத்தது பாஜக அரசு.

இரண்டாவது, இரட்டை வரி விதிப்பு விலக்கு ஒப்பந்தத்தை புதிதாக, சுவிட்சர்லாந்துடன், சர்வதேச சட்ட விதிமுறை வழிகாட்டு குறிப்புகளோடு, இந்தியாவிற்கு பாதகமில்லாமல் உருவாக்கியது. இதன்படி, இரு நாடுகளும் பெயர்ப் பட்டியலை நிபந்தனைகள் எதுவுமின்றி வெளியிடலாம் என புதிய ஷரத்தை உருவாக்கியது பாராததின் மாபெரும் வெற்றி.
இதற்கிடையே பாஜக அரசு ஜூன் 27 அன்று 7௦௦ பேர்கொண்ட பட்டியலை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்காக அனுப்பி வைத்தது. ஆகஸ்ட் 18 அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீல் வைக்கப்பட்ட பட்டியலை அளித்தது. அதை உச்ச நீதிமன்றமும் பாராட்டியது.

தற்போது அக்டோபர் 29ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீலிட்ட சுவரில் கொடுக்கப்பட்ட 627 பட்டியலையும் நீதிமன்றம் உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் தான் ஒப்படைத்துள்ளது. ஆக, உச்ச நீதிமன்றம் பாஜக அரசை கண்டித்ததாக சொள்ளபப்டுவதில் ஏது நிஜம்?

கறுப்புப் பணத்தை மீட்பேன் என காங்கிரஸ் 1௦ ஆண்டுகள் நாடகமாடியது. பாஜக அரசு 4 மாதத்தில் செயலில் இறங்கி பெரும் வெற்றி குவித்திருக்கிறது.

"தூய்மை பாரதம்" போல கறுப்பு பண மீட்பும் நீண்ட பயணமாகும். இது சிறுகச் சிறுக பெருதுளியாகி, வெள்ளமாக பெருக்கெடுக்கும். அப்போது நரேந்திர மோடி உறுதி அளித்த பணம் ஒவ்வொரு ஏழையின் வீடுகளிலும் அரசின் "மானியப்பொருளாக" அலங்கரிக்குமா? அல்லது, நிரந்தர சொத்துக்களை உருவாக்கும் கட்டமைப்பை உருவாக்குமா? என்பது போகப் போகத்தான் தெரியும்.

இந்தியவில் கருப்பு பணம் எவ்வளவு புழக்கத்தில் உள்ளது? அது எப்படி உருவாகிறது? "குளோபல் பைனான்சியல் இன்ட்டகிரிட்டி" என்கிற அமெரிக்க தொண்டு நிறுவனம் இந்தியாவிலுள்ள கருப்புப்பணத்தை கணித்திருக்கிறது.

அதன்படி இந்தியாவின் GDP 1200 லட்சம் கோடி ரூபாய்; இதில் 7௦ சதவீதம் .இது இன்று நேற்றல்ல; 1947 முதல் 2௦௦8ம் ஆண்டு வரை உருவாகி புழக்கத்தில் இருப்பது.

கறுப்புப் பணம் உருவாகும் வழிமுறைகள்:

1. இயற்கை தாது – கனிம வளம்- மணல் வெட்டி எடுபதில் ஊழல்.
2. ரியல் எஸ்டேட் மதிப்பீட்டில் இருக்கும் வித்தியாசப் பணம்.
3. அரசின் "மானியப் பொருட்களை" கள்ள மார்கெட்டுக்கு கொண்டு சென்று விற்கும் பணம்.
4. பள்ளி, கல்லூரி-கேபிடேசன் பீஸ் கணக்கி வராது.
5. அரசியல் கட்சிகளின் ரசீது இல்லா நன்கொடை.
6. பொருட்களை பில் இல்லாமல் வாங்கி விற்கும் வரி ஏய்ப்பு.

இந்த 6 வழிகளையும் அரசு அடைக்க முயற்சித்தாலும் ஒவ்வொரு குடிமகனும் தான் சுத்தமாக இருக்க முயற்சிக்க வேண்டும். கறுப்புப் பணம் என்னும் 'எபோலா' வைரஸை ஒழிக்க அனைவரும் பாடுபட வேண்டும்.
கறுப்புப் பண மீட்புக்கான குழுவின் தலைவரிடம் அரசு அளித்துள்ள பட்டியலில் புதிதாக எதுவுமில்லை அது அரசு ஏற்கனவே தங்களுக்கு விசாரணைக்கு வழங்கயுள்ள ஆவணங்களின் தொகுப்புதான் என்ற குறிப்பீட்டில் இருந்து இந்த அரசு இந்த விசயத்தில் எதையும் மூடி மறைக்க முயலவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் "ஆக்கப்பொறுத்தவனுக்கு ஆறப்பொறுக்கவில்லை" என்பது ஒரு பழமொழி. அந்தவகையில் நமது எதிர்க்கட்சிகளும் தற்போது அந்த ரகமே. அவ்வளவுதான்.

Leave a Reply