மேகாலய மாநிலத்துக்கு முதல் முறையாக இயக்கப்படும் ரயில்சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, வரும் 29-ம் தேதி தொடக்கி வைக்கிறார். இதன் மூலம், இந்திய ரயில்வே முதல் முறையாக மேகலாயா வரை தனது பயணத்தை விவரித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இது வரை ரயில் சேவை இல்லை. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலம் துத்னோய் என்னுமிடத்தில் இருந்து மேகாலய மாநிலத்தின் வடக்குகாரோ ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மெண்டிபதார் என்ற இடம் வரை 19.47 கிமீ. தொலைவுக்கு அகல ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித் தடத்தில், மேகலாயாவுக்கான முதல் ரயில்சேவையை, அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி அருகேயுள்ள மாலிகாவ்னில் இருந்து பிரதமர் நரேந்திரமோடி, வரும் 29-ம் தேதி காணொலி (விடியோ கான்ஃபரன்ஸ்) முறையில் தொடங்கி வைக்கிறார். மேலும், காரோ ஹில்ஸ் மக்களுடன் காணொலி முறையில் அவர் கலந்துரை யாடவுள்ளார்.

Leave a Reply