மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அரசு அமைப்பது என்று முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என்றும் அம்மாநில முதலவர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

மகராஷ்ட்ராவில் பாஜக – சிவசேனா கூட்டணி ஆட்சி அமையவேண்டும் என்பது இவ்விரு கட்சிகளின் விருப்பம் மட்டுமல்ல என்று கூறிய பட்னவிஸ், மாநிலமக்களும் இதையே விரும்புவதாக தெரிவித்தார்.

பாஜக கூட்டணியில் கடந்த 25 ஆண்டுகளாக சிவசேனா இருப்பதையும், மத்திய அரசில் அக்கட்சி அங்கம் வகிப்பதையும் பட்னவிஸ் சுட்டிக் காட்டினார். தனது அரசில் சிவசேனா விரைவில்சேரும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply