மேற்குவங்க தலைநகர் கோல் கட்டாவில் அம்மாநில ஆளும் அரசின் கடும் எதிர்ப்புகளின் மத்தியில் அகில இந்திய பாஜக., தலைவர் அமித்ஷா நடத்திய பேரணியை இலட்ச கனக்கான தொண்டர்கள் திரண்டு வெற்றியடைய வைத்துள்ளனர்.

கறுப்புப்பண விவகாரம் தொடர்பாக சமீபத்தில் பாராளுமன்றத்தின் முன்னே போராட்டம் நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சாரதா நிதி நிறுவன மோசடியில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று கூறமுடியுமா? சாரதா ஊழலில் கொள்ளையடித்த பணம் கறுப்புப்பணமா? வெள்ளைப் பணமா? என்பதை மம்தாபானர்ஜி தெளிவுப்படுத்த வேண்டும்.

மம்தா பானர்ஜிக்கு தைரியம் இருந்தால் இந்த ஊழலில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் நிரபராதிகள் என்று அறிவிக்கட்டும். பர்த்வான் குண்டு வெடிப்பின் பின்னணியிலும் சாரதா ஊழல் பணம் தான் விளையாடியுள்ளது.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இதைப் பற்றி விசாரிக்கும் தேசிய புலனாய்வு குழுவினருக்கு பல தடைகளை மம்தா ஏற்படுத்தி வருகிறார். வங்காள தேசத்தில் இருந்து மேற்கு வங்காளத்துக்கு வரும் ஊடுருவலாளர்களுக்கு இவர் அடைக்கலம் கொடுத்துவருவது ஏன்?

அவர்கள் தங்கள் சொந்த நாட்டு மக்களால்கூட ஒதுக்கப்பட்ட நிலையில் இவர் ஏன் அடைக்கலம் தரவேண்டும்?. ஓட்டுவங்கி அரசியலுக்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அவர் சமரசம் செய்துகொள்ள கூடாது என்று அவர் பேசினார்.

Leave a Reply