டைம் நாளிதழ், நடத்திவரும் கருத்துக் கணிப்பில் பிரதமர் மோடிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 9.8 சதவீத ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. இந்த கருத்துக் கணிப்பில் அமெரிக்காவின் பெர்குசோன் போராட்டக் காரர்களுக்கு ஆதரவாக 10.8 சதவீதம்

கிடைத்துள்ளது. அவர்கள் முதலிடத்தில் உள்ளனர். ஹாங்காங்கில், நடந்த போராட்டத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. நோபல்பரிசு பெற்றுள்ள பாகிஸ்தானின் மலாலா 5.3 சதவீத ஓட்டுக்களுடன் 4வது இடத்தில் உள்ளார்.

ரஷ்ய அதிபர் புடின் 5வது இடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, 2.4 சதவீத ஓட்டுக்களுடன் 11வது இடத்தில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பு வரும் டிசம்பர் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெற்றவர்கள் 8ம் தேதி அறிவிக்கப்படுவார்.

Leave a Reply