சட்டம்–ஒழுங்கை சமாளிக்க 'ஸ்மார்ட்' காவல்துறை திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அனைத்து மாநில காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு அசாம்மாநிலம் கவுகாத்தியில் நேற்று தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாநாட்டை தொடங்கி வைத்தார்.

நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–

வீர, தீர செயல்களுக்கு விருதுபெற்ற போலீசாருக்கு எனது பாராட்டுக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன். சுதந்திரம் பெற்றகாலம் முதல் இதுவரை பணியில் இருந்த போது 33 ஆயிரம் போலீசார் பலியாகி இருக்கின்றனர். இவர்களது தியாகம் போற்றப்படும். இந்ததியாகம் வீணாகி போக கூடாது தற்போது நடைபெறும் இந்த மாநாட்டின் மூலம் போலீஸ் துறை புத்துணர்ச்சி பெறுகிறது. நாட்டுக்கு போலீசார் ஆற்றிய பணியையும், தியாகத்தையும், பங்களிப்பையும் இந்தசமூகம் மறக்க முடியாது. மேலும் ஒதுக்கவும் முடியாது.

பணியில் இருந்த போது எத்தனையோ போலீசாரை நாம் இழந்து இருக்கிறோம். நாடு சுதந்திரம் பெற்றது முதல் 33 ஆயிரம் போலீசார் இறந்துள்ளனர். இது குறைந்த எண்ணிக்கை இல்லை. இதன் மூலம் நாம் சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம்.

போலீசாரின் தியாகங்கள் வீணாகி விடக் கூடாது. புதிதாக பணிக்கு வரும் போலீசாருக்கு கடந்த கால போலீசாரின் தியாகசெயல்களை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

போலீஸ் நிலையங்களில் ஸ்மார்ட் போலீஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அது குறித்து ஆலோசித்து வருகிறேன். அதற்கான இணையதளம் அனைத்து போலீஸ் நிலையத்திலும் இருக்கவேண்டும். போலீசாரின் தியாகங்களை அந்த இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

ஸ்மார்ட் என்பதில் எஸ்–ஸ்டிரிக்ட், எம்–மாடர்ன் மற்றும் மொபைல், ஏ–அலார்ட் மற்றும் அக்கவுன்டபிள், ஆர்– ரிலையபிள், டி–டெக்னோ மற்றும் டிரெய்ன்ட் ஆகும்.

இதுவே எனது எண்ணமும், நோக்கமும் ஆகும். இதற்கான முயற்சியில் நான் ஈடுபடுவேன். அவர்கள் தொடர்ந்து சிறப்பாகபணியாற்றி தங்கள் துறையின் கவுரவத்தை மேம்படுத்த வேண்டும். போலீசார் உளவு மற்றும் பாதுகாப்பு துறையில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

நாட்டில் சட்டம்–ஒழுங்கு மேம்பாட்டில் தீவிரகவனம் செலுத்தி வருகின்றனர். திறமையான உளவுத்துறையின் மூலமே ஆயுதம் இல்லாத நாட்டை வழிநடத்தி செல்லமுடியும். எனவே மிக உயர்தரமான உளவுத்துறை 'நெட்வொர்க்' மிகவும் அவசியம்.

நாட்டில் மிக நல்ல காரியங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அதை வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்யவேண்டும்.

நாட்டுக்கு உழைக்கும் போலீசாரின் குடும்ப நலன் மிகவும் முக்கியமானது. போலீஸ் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply