மணிப்பூர் மாநில வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறை மேம்பாடு அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் "சங்காய் மணிப்பூர் சுற்றுலாத் திருவிழா'வின் நிறைவு நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று மோடி பேசியதாவது:

இந்த மாநிலத்துக்கு சாலைவசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். மற்ற தகவல்தொடர்பு கட்டமைப்பு முறைகளை மேம்படுத்த வேண்டும். அப்போது தான் சுற்றுலாப் பயணிகளால் மணிப்பூரில் பயணம்செய்ய இயலும்.

வடகிழக்கு மாநிலங்கள் கவர்ந்திழுக்கக்கூடிய இடமாக உள்ளன. இந்தப் பிராந்தியத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

குஜராத்தில் உள்ள துவாரகை பகுதியை சுற்றுலா பயணிகள் விரும்புவதற்கு அதன் மதத்தொடர்பு காரணமல்ல; அந்நகரம் நன்கு மேம்படுத்தப்பட்டுள்ளதே காரணம். அதேபோல், இயற்கை எழில்நிரம்பிய வடகிழக்குப் பிராந்தியத்தையும் மேம்படுத்த முடியும்.

மணிப்பூரின் வளர்ச்சிக்கு சுற்றுலா மட்டுமின்றி விளையாட்டு துறையும் முக்கியப்பங்காற்ற முடியும். இங்கு விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

மாநில இளைஞர்கள் பல்வேறு விளை யாட்டுகளில் திறமையான வர்களாக உள்ளனர் என்றார் மோடி.

Leave a Reply