தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க நடுக் கடலில் சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச தமிழ் தாவர உணவாளர்கள் சங்கமத்தின் மாநாடு சென்னை அண்ணா பல்கலை கழக வளாகத்தில் நடைபெற்றது. 2 நாள் மாநாட்டை தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், விழாவிற்கு பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழக மீனவர் பிரச்சினையை மத்திய அரசு மிகவும் கவன முடன் கையாண்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காணும் முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் நடுக் கடலில் எல்லை தாண்டி சென்றுவிடுவதை தடுக்க நடுக்கடலில் சிக்னல் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு வருகிறது.

கருப்புபண விவகாரத்தை பொருத்த வரை முந்தைய காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்திவந்தது. ஆனால் பாரதீய ஜனதா அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு கருப்புபணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. விரைவில் அந்த பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் வெளியிடுவதால் பாஜவுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. காங்கிரசுக்குத்தான் பிரச்சினை என்றார்.

Leave a Reply