ஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம்தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,'' என்று, அமைச்சர் நிதின் கட்காரி, தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபாவில், வர்த்தக கப்பல் போக்கு வரத்து திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கொண்டுவந்து பேசியதாவது , 'குளச்சல் துறைமுகம், மிகமிக, முக்கியமான துறைமுகம். ஆசியாவிலேயே, மிகவும் இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்த துறை முகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டும் என்றால், அங்கு ஆழப்படுத்தும் பணிகளை மேற்கொண்டாக வேண்டும். 12 அடி அல்லது 14 அடி ஆழப்படுத்துவதற்கே கூட, பல ஆயிரம் கோடி, நிதிசெலவிட வேண்டும். இந்நிலையில், குளச்சல் துறைமுகம், நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது; கைவசம் உள்ள, அந்த துறைமுகத்தை மேம்படுத்த, மத்திய அரசு உதவிசெய்து, அதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்,'' என்றார்.

Leave a Reply