நாடுமுழுவதும் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், இந்த விழாவை தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களிலும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை, கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்யுள்ளார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்களின் வாராந்திர கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்றது. அதில், திருவள்ளுவர் பிறந்த நாளை வடமாநிலப் பள்ளிகளில் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அறிவித்ததன் பேரில், 2015ம் ஆண்டு ஜனவரி 15 முதல் மார்ச் 20-ம் தேதிவரை நாடுமுழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் தமிழ்மொழியின் திரு விழாவாக தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள், அரசு, தனியார்பள்ளி, கல்லூரிகள், நற்பணி இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் சார்பில் திருவள்ளுவர் பிறந்த நாளன்று கட்டுரை, பேச்சுப் போட்டிகள் போன்றவற்றை நடத்தி சிறப்புடன் கொண்டாட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply