பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கவிஞர் வைரமுத்துவை அவரது இல்லத்தில் சந்தித்து, தூய்மை இந்தியா திட்டத்திற்கு பாடல் எழுதி தருமாறு கோரிக்கை விடுத்தார். இதனை வைரமுத்துவும் ஊதியம் ஏதும் வாங்கி கொள்ளாமல் பாடல் எழுதித் தருவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், இதை ஒருசேவையாகக் கருதி சாதி, மதம்கடந்த உயர்ந்த திட்டம் என்ற வகையில், எந்த ஊதியமும் வாங்காமல் பாடலை எழுதித் தருகிறேன். பட்டிதொட்டி எங்கும் பரவ இந்தப்பாடல் ஒரு சிறுகருவியாக பயன்பட்டால் நான் பெரும்மகிழ்ச்சி அடைவேன்" என்றார்.

Leave a Reply