சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, 1979ம் ஆண்டு தொகுப்பை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அனில்குமார் சின்ஹா (58) பொறுப்பேற்றார்.

சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநராக 21 மாதம் அனுபவம்வாய்ந்த சின்ஹா சாரதா சிட்பண்ட் ஊழல் விசாரணையை மேற் பார்வையிட்டவர். கூண்டுக் கிளியாக சிபிஐ சிறைபட்டு கிடப்பதாக உச்சநீதிமன்றம் விம்ர்சித்துள்ள நிலையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கொண்டுவரும் உன்னத கடமை அனில் குமார் சின்ஹாவுக்கு உள்ளது.

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற அரசு கென்னடிபள்ளியில் படித்தவர் இவர். "சிறியதோ, பெரியதோ… சவால்கள் என்று எதுவும் இல்லை. நல்லது செய்வதற்கான வாய்ப்புகள்தான் அனைத்து சவால்களுமே" என்று நிருபர்களிடம் தமது முன்னுரிமை பணிபற்றி விவரித்தார் அனில் குமார் சின்ஹா.

சிபிஐ புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திரமோடி, தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நடத்திய ஆலோசனையில் சின்ஹாவின் பெயர் ஒப்புக் கொள்ளப்பட்டது.

உளவியல் படிப்பில் முதுகலைபட்டம் பெற்றவர் அனில் குமார் சின்ஹா. ஐபிஎஸ் பணியில் 1979-ம் ஆண்டு சேர்ந்தார். அதற்கு அடுத்த 18 ஆண்டுகள் பிஹாரில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2013 மே மாத்தில் சிபிஐ சிறப்பு இயக்குநராக பதவியேற்றார்.

Leave a Reply