தமிழ்நாடு காவிரிடெல்டா விவசாயிகள் குழும பொதுச்செயலாளர் சத்திய நாராயணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் விவசாயிகளின் முக்கிய எதிர்பார்ப்புகளுக்கு தீர்வு காண வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணை டெல்லியில் காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் சார்பாக நிர்வாகிகள் சந்தித்துப் பேசினோம்.

அப்போது அவர், 'விவசாயிகளின் எதிர் பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வேன் என உறுதியளித்தார். காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்க உறுதியாக செயல் படுவேன். நீதியின் அடிப்படையில் வலுவாகப் பணியாற்றுவோம் எனத் தெரிவுப்படுத்தினார். இது குறித்து மத்திய நீர்வளத் துறை, வேளாண்மைத் துறை மந்திரியை நாங்கள் சந்தித்து பேசுவதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply