யமுனை நதியில், டில்லியி லிருந்து ஆக்ரா செல்வதற்கு, விரைவில் படகு போக்கு வரத்தை தொடங்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது.

மத்திய சாலை போக்கு வரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சரும், பாஜக., மூத்த தலைவர்களில் ஒருவருமான நிதின்கட்காரி கூறியதாவது: நாட்டின் தலை நகரான டில்லியிலிருந்து, உ.பி., மாநிலத்தில் உள்ள ஆக்ராவுக்கு, யமுனை நதியில் படகு போக்கு வரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், நீர் வழித்தடங்களை அதிகரிக்கும் வகையிலும் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.

யமுனை நதியின் குறிப்பிட்ட இடங்களில் படகுகளை நிறுத்து வதற்கான கட்டமைப்பு வசதியும், நதியின் நீரோட்டத்தை சீராக்குவதற்காக சிறியதடுப்பு அணைகளையும் அமைக்க, நெதர்லாந்து நாட்டிடம் தொழில்நுட்பவசதி கேட்கப்பட்டது. இதற்கு, அந்நாட்டு அரசு சம்மதித்துள்ளது.

தடுப்பு அணைகள் கட்டுவதால், டில்லி, அரியானா மாநிலங் களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏதுவும் ஏற்படாது. இந்ததிட்டத்தை நிறைவேற்றுவதற்கான அமைச்சரவை குறிப்பு, இன்னும், பத்து நாட்களில் தயாரிக்கப்படும். டில்லிமாநில அரசிடமும் இதற்கு ஒத்துழைப்பு கோரப்படும். பிரதமர் நரேந்திரமோடி, நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோரிடம் இந்த திட்டத்துக்காக சிறப்புநிதி ஒதுக்கீடு செய்யும்படியும் வலியுறுத்த உள்ளோம். என்று , அவர் கூறினார்.

Leave a Reply