கண் பார்வை அற்றவர்களுக்காக ப்ரெய்லி குறியீடு கொண்ட ரூபாய் நோட்டுகள் இந்த நிதியாண்டு இறுதிக்குள் அறிமுகம் செய்யப் படும் என மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஹெயந்த் சின்ஹா தெரிவித்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் அவர் அளித்தபதில்:

பார்வையற்றவர்களுக்காக பிரெய்லி குறியீடுகள்கொண்ட ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்வதுகுறித்து தொடர்புடைய நிபுணர்களிடம் மத்திய அரசு ஆலோசனை நடத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் அறிமுகம்செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனிமொழி எழுப்பிய மற்றொரு கேள்விக்கு சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) டாக்டர் மகேஷ் சர்மா எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

சுற்றுலாசெல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்துதருமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுற்றுலா அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய சுற்றுலா துறையின் நிதியுதவி திட்டத்தின் மூலம் இதற்கான செலவுகளை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் சுற்றுலா செல்லும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் வசதியின்மை குறித்து தேசிய அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி மாற்றுத் திறனாளிக்கு வேண்டிய வசதிகளுடன் ஒவ்வொரு நகரத்திலும் குறைந்தபட்சம் ஒருவிடுதி மற்றும் ரெஸ்டாரண்டு அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply