உலகின் மாபெரும் ஜன நாயக நாடுகளில் ஒன்றான இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றிய அண்ணல் அம்பேத் கரின் 58-வது நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்பட்டது

டாக்டர் அம்பேத்கரின் அருமை-பெருமைகளை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

இது தொடர்பாக தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், 'என்றென்றும் நிலைத்திருக்கும், விலை மதிப்பில்லா தனது சேவையின் மூலம் இந்தநாட்டுக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக பெருமதிப்புக்குரிய அவரது நினைவு நாளில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு நான் தலை வணங்குகிறேன்' என்று குறிப்பிட்டார்.

Leave a Reply