ஜார்கண்ட் தேர்தல் பிரசார த்தில் பிரதமர் மோடி நேற்றைய காஷ்மீர் தாக்குதலுக்கு கடும்கண்டனம் தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல் இந்திய ஜனநாய கத்தின் மீது தொடுக்கப்பட்ட காயம். இந்தசம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.

பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகம் போற்றுதலுக் குரியது. இவர்களது தியாகம் எப்போதும் மறக்கமுடியாது. இது எதிர் கால சந்ததியினர் வரை நினைவில் கொள்ளப்படும். இந்த தாக்குதலில் ஜார்கண்ட் புதல்வன் இறந்துள்ளார். இவரது வீரதியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.

மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம் : நான் கடந்த லோக் சபா தேர்தலில் இங்கு வந்து ஓட்டுகேட்டேன். நீங்கள் அள்ளி வழங்கினீர்கள். பா.ஜ., வின் வெற்றிக்கு காரணமாக இருந்தீர்கள். மத்தியில் கூட்டணி ஆட்சி இல்லாத அளவிற்கு ஜார்கண்ட் மக்கள் உதவியுள்ளீர்கள். நான் இப்போது எதுவும்கேட்க போவதில்லை.

மத்திய அரசுடன் , இங்குள்ள மாநில அரசையும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துசெல்ல வாய்ப்பு தாருங்கள், என்று கேட்கிறேன். நிச்சயம் மாநிலத்தை முன்னேற்றுவோம். இங்கு நல்லவளம் உள்ளது. இந்த மாநிலத்தின் வளர்ச்சியே எனது நோக்கம். வரும் தேர்தலில் மெஜாரிட்டி அரசை ஏற்படுத்துங்கள். கூட்டணி ஆட்சி யாளர்கள் இங்கு கொள்ளை அடித்துள்ளனர். கூட்டணி ஆட்சிக்கு இடம் தரவேண்டாம். என்று மோடி பேசினார்.

Leave a Reply