வங்க தேச தலைநகர் டாகாவிற்கு செல்வதற்கான நேரடி பஸ் வசதி வரும் 10-ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. இந்த பஸ் வசதி அசாமின் கவுகாத்தி நகரில் இருந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங் நகர் வழியாக டாகா செல்லும் வகையி்ல் பயண திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.

விரைவில் இந்தியா-வங்க தேசம் இடையே ரயில் பாதை பயணத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட உள்ளது. விழாவில் மத்திய அரசி்ன் சாலை போக்கு வரத்து துறை, மத்திய நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் அசாம், மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பயணம் மேற்கொள்வர்

முன்னதாக கடந்த மாதம் 25-ம் தேதி புதுடில்லியில் இருந்து நேபாளத்திற்கு துவக்கப்பட்ட பஸ் பயணத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Leave a Reply