கடற்கரை கிராமங்கள்வழியாக, அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் கடலோர போக்கு வரத்து திட்டம், இந்தியாவில் விரைவில் செயல் படுத்தப்படவுள்ளதாக,'' மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடிக்கு வருகைதந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் புதிய பஸ் ஸ்டாண்டை சுத்தப்படுத்தும் பணியினை துவக்கி வைத்தார்.

பின் அவர் பேசியதாவது: பிரதமர் தூய்மை திட்டத்தின் கீழ், இந்தியாவை உலகத்தில் தலை சிறந்த தூய்மை நாடாக உருவாக்க திட்டம்கொண்டு வந்துள்ளார். ஒவ்வொருவரும் தனது வீடு, நகர், மற்றும் நாடு ஆகியவற்றை தூய்மையாக வைத்து கொள்ள பணிகளில் ஈடுபட வேண்டும். அதன் அடிப்படையில் தூத்துக்குடி புதியபஸ் ஸ்டாண்ட் தூய்மைப்படுத்தும் பணி ஒரு வாரத்திற்கு நடக்கும்.

அம்பேத்கரின் நினைவு தினமான இன்று நெடுஞ் சாலைகளில் பசுமையாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார். இத்திட்டத்தை அமைச்சர் நிதின் கட்கரி துவக்கிவைத்துள்ளார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை தேசியநெடுங்சாலை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் போது 31,677 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. ஒரு லட்சம் மரக்கன்றுகள் நான்கு வழிச்சாலையில் நடவு செய்யப்படவுள்ளன.

மோடி அரசு தூத்துக்குடி துறைமுகத்தை மேமஞூபடுத்தும் நோக்கத்திற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். குளச்சல் துறைமுகம் மேம்படுத்தும் பணிகள் செய்யப்படும். அனைத்து பணிகளிலும் அரசு கவனம்செலுத்தி வருகிறது. தூத்துக்குடி -கொழும்பு பயணிகள் போக்குவரத்து விரைவில் துவக்கப்படும்.

சேது சமுத்திர திட்டத்தினை மாற்றுப்பாதையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமான ஆய்வுக் குழுவிடம் தற்காலிக அறிக்கை பெறப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்

Tags:

Leave a Reply