தமிழகத்தில் ஒரு திரைப்படம் திரையரங்குகளில் திரையிடப்படுவதற்கு முன்பே, வெளியிட அனுமதி அளிக்கக் கூடாது என்றும் தடை செய்ய வேண்டும் என்றும் கூச்சல்கள் சில ஆண்டுகளாக எழுகின்றன. இதற்கு முக்கிய கரணம் பார்க்கலாம் என்ற வக்கிர சிந்தனை. தமிழகத்தை தவிர வேறு மாநிலங்களில் இம்மாதிரியான பிரிச்சினைகள் எழுவதில்லை.

அப்படியே எழுந்தாலும் அதை பெரிதாக எவரும் எடுத்துக் கொள்வதில்லை. மத்திய தணிக்கை பிரிவு ஒரு திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளித்த பின்னர் அதற்கு எதிர்ப்பு வலுக்க காரணமே, சுயலாப வேட்டை. தமிழகத்தில் அரசியல் இயக்கங்கள், சாதி அமைப்புகள், சிறுபான்மை மத அமைப்புகள், மொழி அமைப்புகள் மட்டுமே இம்மாதிரியான கோரிக்கைகளை வைக்கிறார்கள். திரைப்படத்தை பார்க்காமலே இம்மாதிரியாக கோரிக்கை எழுவது சரிதானா என்பதை சற்றே ஆய்வு செய்ய வேண்டும்.

'கத்தி' திரைப்படத்திற்கும் 'புலி பார்வை' திரைப்படத்திற்கும் தடை கூறி கூச்சல்கள் எழுந்தன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை போராளியாக காட்டுவது ஒரு 'குற்றம்'. அமெரிக்காவில் திரையிடப்பட்ட ஒரு படத்தை இங்கு திரையிடக்கூடாது, அப்படத்தில் முகமது நபியை கொச்சைப்படுத்தி யிருக்கிறார்கள் என முஸ்லிம் அமைப்புகள் 2012 செப்டம்பரில் நடத்திய போராட்டமே முன்னோடி. சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமியார்கள் பல்வேறு முனைகளிலிருந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வேடிக்கை என்ன வென்றால், அந்த படத்தை எவரும் பார்க்கவில்லை. அதுமட்டுமல்ல், இந்தியாவிலேயே அந்தப்படம் திரையிடப்படவில்லை. ஆனாலும்ஆட்சியாளர்கள், இஸ்லாமியர்களின் வாக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக ஆர்ப்பாட்டம் நடத்தி பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தணிக்கை துர்ரையினை திரைப்படத்தை பார்த்து சான்றிதழ் கொடுத்த பின்னர், அடிப்படைவாதிகள் தங்களின் கலவரக் குணத்தின் காரணமாக மீண்டும் அவர்களுக்கு காண்பித்த பின்னர் தான் திரைப்படம் வெளியிட வேண்டும் என்றால், இது சண்டியர் சமாச்சாரம் ஆகிறது. இந்திய ஜனநாயக நாடு என்பதை மறந்து விடுகிறார்கள். திரைப்படத்தில் உண்மைக்கு மாறாக காட்சிகள் இருக்குமானால் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பதில் சட்டத்தை தன கையில் எடுத்துக் கொள்ளும் போக்கு, இஸ்லாமிய நாடுகளிலும், சர்வாதிகார நாடுகளிலும் இருக்கலாம், ஆனால் ஜனநாயக நாட்டில்?

தமிழக அரசு ஒரு படத்தை திரையிட தடைவிதித்தது உத்திரவு பிறப்பிக்கிறது. 'விஸ்வரூபம்' படத்தை தடை செய்த விஷயத்தில், மாநில அரசு இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. படங்களை வெளியிட அனுமதி அழிப்பது தொடர்பான விஷயத்தில், தணிக்கைக் குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் இயக்குநர் பிரகாஷ் ஜா வழக்கில் தெளிவாக தீர்ப்பு அளித்த பின்னரும், மாநில அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாற்றாக நடவடிக்கை எடுக்கிறது. ஆளும் வர்க்கத்தாருக்கு சில லகரங்கள் சென்றடையவில்லை என்ற காரணத்திற்காகவும் ஆளும் கட்சியின் தொலைக்காட்சிக்கு படம் கொடுக்க மறுத்த காரணதிற்காகவும் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டதாகவும் படத்தில் நடித்தவர் எதிர் கட்சியினருக்கு ஆதரவாக இருப்பதாலும் இவ்வாறு தடைவிதிப்பதாக அன்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால் தான் இதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இது கேலிக் கூத்து, ஒரு அரசு சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பட்சத்தில், அதற்குரியவர்களை கைது செய்யாமல், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக தடை உத்தரவு பிறப்பித்தது! இதுவே ஹிந்து தெய்வங்களை நிந்தனை செய்து படம் எடுப்பதும் புனிதத்தலமான கோயில்களில் அசிங்கமான முறையில் படமாக்கும் போதும் இவர்களுக்கு எதுவும் தெரியாது. பலர் புகார் கூறினாலும் நடவடிக்கை எடுக்க முயலுவதில்லை.

'திருமணம் எனும் நிக்காஹ்' என்ற திரைப்படத்தை பார்க்காமலே, 'அதில் ஷியா பிரிவு முஸ்லிம்களை மிகவும் இழிவுபடுத்தி சித்தரித்துள்ளனர். இஸ்லாத்தின் பண்டிகைகளை காட்டுவதால், மக்களின் மனதில் மாறுபட்ட சிந்தனை ஏற்படும். இதனால் மதக் கலவரம் எபடுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே இதை தடை செய்ய வேண்டும்' என தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாத்தின் துணைத் தலைவர் அலிகான் வழக்குத் தொடுத்தார்.

ஒரு படத்திற்கு ஆங்கிலப் பெயர் வைத்ததின் காரணமாக தடை விதிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தினார்கள். 'மும்பை எக்ஸ்பிரஸ்' என்ற திரைபடத்திற்கு இந்த எதிர்ப்பு எழுந்தது. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளியில் பயில வைப்பதும், ஆங்கில முறையில் உடை உடுத்துவதும், ஆங்கில மொழிக்கு துணை போவதும் ஊரறிந்த விஷயம். பணம் பார்க்கும் நோக்கமே தூக்கலாக உள்ளது. 'துப்பாக்கி' படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதியாக காட்டுகிறார்கள் என்பதர்காக தடை விதிக்க வேண்டும் என போராட்டம் நடைபெற்றது. திரைப்படம் என்பது நிதர்சனமான உண்மையை வெளிசதிற்கு கொண்டு வருவது என்பதை பலர் மறந்துவிட்டு செயல்படுகிறார்கள். இவ்வாறு போராட்டம் நடந்தால், படத் தயாரிப்பாளர்கள் அடிபணிந்து, குறிப்பிட்ட காட்சிகளை நீக்கி விடுகிறார்கள், இதன் மூலம் போராட்டக்காரர்கள் விளம்பரம் பெறுவது ஒன்றே கண்ட பலன்.

இவ்வாறு ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தும் அமைப்புகளின் பட்டியலை பார்த்தால் நன்கு புரியும். 7 கோடி தமிழ் மக்களை பிரதிநிதியாக இருப்பதாக கூறும் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தும் போது, வெறும் செல டஜன் நபர்கள் மட்டுமே களத்தில் இருப்பார்கள். உதாரணமாக 'டேம் 999' என்ற திரைப்படத்தை திரையிடக் கூடாது என தமிழ் அமைப்புகள் களத்தில் இறங்கின. இவர்கள் கூறும் காரணம் வேடிக்கையானது. இவ்வாறு போராடும் தமிழ் அமைப்புகள் தேர்தல் களத்தில் வைப்புத் தொகையை மீட்கக் கூட முடியாத நிலையில் உள்ளவர்கள். 'சண்டியர்' என பெயரிட்டு படம் வெளிவரும் சூழ்நிலையில், சாதி ஒன்றின் அமைப்பினர் தங்களின் உணர்வுகள் புண்படும் என கூறி, படத்திற்கு பெயர்மாற்றம் செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி 'விருமாண்டி' என பெயர் மாற்றம் செய்ய வைத்தார்கள்/ ஆனால் தேவர் பெருமகனார் கூறிய தேசமும் தெய்வமும் எனது இரண்டு கண்கள் என கூறியதை மறந்து செயல்படுகிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தமிழகத்தில் அரசியலும் சினிமாவும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடப்பதால். அரசியல்வாதிகளுக்கு இந்த தெருக்கட்சிகள் வெகுவாக உதவும். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பலரை கொலை செய்த ஜெயப்ரகாஷ் என்பவன் 'நூறாவது நாள்' படத்தை பார்த்த பின்னர் தான் கொலை செய்யும் நோக்கமே வந்தது என வாக்குமூலம் கொடுத்தான். அப்போது எவரும் இது பற்றி விவாதிக்கவில்லை. இதற்கு பின்னர் பல படங்கள் கொலை, கொள்ளை போன்ற காட்சிகள் இடம்பெறும் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சிறுபான்மையினர் கொடுக்கும் திரைப்படம் சம்பந்தமாக எந்த புகாருக்கும் உடனடி நடவடிக்கை. பெரும்பான்மையான ஹிந்துக்கள் கொடுக்கும் எந்த புகாருக்கும் மதிப்பு கொடுப்பதில்லை. எனவேதான் இஸ்லாமியர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப படங்களை தடை செய்ய கோருவதும், அதற்கு அரசு பணிவதும் வாடிக்கையாகிருக்கிறது.

மும்பை பட உலகில் தலைமறைவு தீவிரவாதி தாவூத் இப்ராஹிம் வைத்தது தான் சட்டம், இதை தடுக்க எந்த அமைப்பும் முன்வருவதில்லை. தாவூதின் போதைப் பொருள் கடத்தலில் கிடைக்கும் பணத்தை சினிமாவில் முதலீடு செய்கிறான் என்பது தெரிந்தும் தடுக்க முயலவில்லை.

நன்றி விஜயபாரதம்

Leave a Reply