1997-லிருந்தே சீனாவின் கட்டிப்பாட்டிற்குள் வந்த ஹாங்காங் நகரம் ஒரு கடல் சூழ்ந்த தீவுப்படுதி. இத்தீவில் சுமார் 75 லட்சம் மக்கள் (பெரும்பாலும் சீன வம்சாவழியினர்) குறுகிய நிலப்பரப்பில் அடர்த்தியாக வசித்து வருகின்றனர். சீன வம்சாவழியினர் வாழும் ஹாங்காங்க்கும் தைவானும் சீனாவிடமிருந்து கடலால் பிரிந்துள்ள பகுதிகள். இந்த இரண்டும் சீனாவுடன் பாரம்பரியமாக இணைந்திருந்த பகுதிகள். எனவே, இவற்றிக்கு சீனா நீண்டகாலமாக உரிமை கொண்டாடி வருகிறது.

சீனாவைத் துண்டுப்போட்டு ஆக்கிரமித்திருந்த பல ஏகாதிபத்திய நாடுகள் சீனப் புரட்சியின்போது வெளியேறின. ஆனால், ஹாங்காங்கை ஒரு காலனி நாடாக பிரிட்டன் தொடர்ந்து வைத்துக்கொண்டிருந்தது. அதேபோல், சீனப் புரட்சியின்போது, கம்யூனிச எதிர்ப்பு புரட்சித் தலைவர் சியாங் கே ஷேக் சீனாவிலிருந்து தப்பிச்சென்று தைவானில் தஞ்சமடைந்து, அப்பகுதியை மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்.

சீனா ஒரு சோசலிசக் குடியரசாக உள்ளது. ஆனால், ஹாங்காங்கும் தைவானும் முதலாளித்துவ நாடுகளாக இருந்து வருகின்றன. 199௦-ல் ஏற்ப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைத்தது பிரிட்டன். அந்த ஒப்பந்தத்தின்படி ஹாங்காங்கும் சீனாவும் ஒரே நாடாக ஆனாலும், ஹாங்காங் ஒரு முதலாளித்துவ நாடாகத் தொடரும் என்பதை வலியுறுத்தும்போது, 'ஒரு நாடு இரு அரசியலமைப்புகள்' என்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு சீனாவுடன் இணைந்த பிறகும், ஹாங்காங் ஒரு தன்னாட்சி அதிகாரம் உள்ள பகுதியாக ராணுவம், பாதுகாப்பு போன்ற சிலவற்றைத் தவிர மற்றவற்றில் தானே தீர்மானித்துக்கொள்ளும்.

கிட்டத்தட்ட திபெத்தைப் போன்ற ஆட்சியமைப்பு அங்கு நிறுவப்படும்,
அத்துடன், அனைவருக்கும் வாக்கு என்ற அடிப்படையில் தேர்தல் முறையையும் 2017-க்குள் சீன ஹாங்காங்கில் நிறுவ வேண்டும் என்றும் ஏற்றுக் கொள்ளப்படது. அதன் விளைவாக 1998-ல் ஒரு அடிப்படைச் சட்டத்தைக் கொண்ட சிறு அளவிலான அரசியல் அமைப்புச் சட்டமும் உருவாக்கப்பட்டது.

தற்போது ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் கடந்த ஒரு வாரமாக முக்கிய நெடுஞ்சாலைகளையும் அரசு அலுவலகங்களையும் மறித்து, சீனாவின் பிரதிநிதியான நகரத்தலைவர் லியுங் சன்யிங்கிற்கு எதிராக மாணவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்து ஓய்ந்துள்ளன. ஹாங்காங் ஒரு வணிக நகரம், அங்குள்ள சொத்துக்கள் எல்லாம் ஒருசிலர் கைகளில் குவிந்துள்ளன. மற்றவர்கள் கூலிக்கு உழைத்து தங்கள் வீடுகளுக்கு வாடகை உள்ளிட்ட செலவீனங்களை எதிர்கொள்ளும் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.சுதந்திரம் வேண்டி, சீனாவிலிருந்து ஹாங்காங் நகருக்கு குடிபெயர்ந்த சீனர்கள் தற்போது கடுமையான ஏற்றத்தாழ்வுகள் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

மாதம் முழுவதும் வேலைசெய்யாவிட்டால் அவர்களால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் நகரை நிலைகுலையச்செய்து போக்குவரத்தை முடக்கி, பணியிடங்களுக்கு மக்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் ஆர்ப்பாட்டக்கார்கள் உருவாக்கியுள்ளனர். இதை அம்மக்களால் சகித்துக்கொள்ள முடியாததால் ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக குறைந்து போராட்டங்கள் வடியத் தொடங்கி விட்டன. ஹாங்காங் நகரத் தலைவர் போராட்டக்காரர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளில் இறங்கிகியதால், அவருடன் பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்றும் அவர் ஒரு வாரத்திற்குள் பதவி விலகவில்லையென்றால், போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் ஏற்றும், சீன அரசு அதிகாரிகளுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எண்டும் அறைகூவல் விட்டிருந்தனர்.

ஆனால், தற்போது ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்த நிலையில்,அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அமெரிக்காவும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தங்கள் போராட்டங்களை ஆதரிக்க முழுமையாக முன் வராததாலும், ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு இறங்கி வந்துள்ளனர்.

சீனாவுடன் இணைவதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், சீனாவுடன் நெருக்கமான வர்த்தக, கலாச்சார உறவுகளைப் பேணக்கூடிய அரசு தைவானில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவான இயக்கங்கள் அங்கு வலுப்பெறவில்லை. அத்தோடு, சீனாவில் சமூக வலைதளங்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள் அரசு சார்பு நாளிதழ்கள் மற்றும் பெற ஊடகங்கள் மூலமாக மட்டுமே கிடைப்பதால் சீனாவிலும் ஆதரவு பெருகவில்லை.

ஆர்ப்பாட்டங்களை விரிவாகத் திட்மிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்பார்பிலும் மண் விழுந்தது. மேலும், அரசு ஆதரவு சக்திகள் பெருமளவில் திரண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை இடைமறித்து நேரடி மோதலில் ஈடுபட்டதும் அவர்களை பின்னுக்குத் தள்ளியது. தற்போதைக்கு சீனா நிம்மதிப் பெருமூச்சு விட்டாலும், ஜனநாயகத்திற்கான போராட்டம் நிரூபித்த நெருப்பாக கனன்று கொண்டிருப்பதை உணர்ந்துதான் ஆகவேண்டும்.

அப்படியொன்றும் சீன அரசுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பெரிய இடைவெளி விழுந்து விடவில்லை. தன்னாட்சி அதிகாரம் உள்ள பகுதியாக ஹாங்காங்கை சீனா மதித்து, அதன் உள்விவகாரங்களில் நேரடியாத் தலையிட இதுவரை மறுத்து வந்துள்ளது. தேர்தல்களை 2017-ல் நடத்தவும் சம்மதித்துள்ளது. ஆனால், தேர்தல் முறையில்தான் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இத்தேர்தல்கள் மூலம் தனது கட்டுப்பாட்டிலிருந்து ஹாங்காங் முழுமையாக விலகிச் சென்றுவிடக் கூடாது என்பதில் சீனா துவக்கம் முதலே கவனமாக இருக்கிறது. அதனால், ஏற்கனவே 2003-ல் தேர்தல் குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தில், நகரத்தலைவர் பதவிக்கு நேரடித்தேர்தல் தான் நடத்தப்படவேண்டும் என்றும் சீன அரசு சார்பு தேர்வுக் கமிட்டி முன்வைக்கும் வேட்பாளர்களில் ஒருவரைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஒரு விதியை அந்த ஒப்பந்தத்தில் சீனா திட்டமிட்டு குறிப்பிட்டிருந்தது.

ஆனால், போராட்டக்காரர்கள் அது கட்டுப்படுத்தப்பட்ட ஜனநாயக முறைக்கு மட்டுமே வழிவகுக்கும். தாங்கள் விரும்பும் முழுமையான ஜனநாயத்திற்கு யார் வேண்டுமானாலும் நகரத்தலைவர் பதவிக்குப் போட்டிபோடலாம் என்பதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றனர். இக்கோரிக்கையை சீன அரசு ஏற்றுக்கொள்ளாததால் எதிர்ப்பு வெடித்துள்ளது.
ஹாங்காங்கில் ஜனநாயகத்தை முழுமையாக நிறுவவேண்டும் என்று மிகத் தாமதமாக அறிவுறுத்த முன் வந்துள்ள பிரிட்டன், ஹாங்காங்கை தனது கட்டுப்பாட்டில் 155 ஆண்டுகள் வைத்திருந்த காலம் முழுக்க, தேர்தலையோ ஜனநாயக உரிமைகளையோ நிலைநாட்டவில்லை. இப்போது ஜனநாயகம் குறித்துப்பேச அதற்கு எஆரிமை இருக்கிறது? அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த தற்போது உரிமை உள்ளது. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியின்போது எந்த ஜனநாயக உரிமையும் வழங்கப்படவில்லை அப்போது, அதற்கெதிராக வாய் திறக்காத அமெரிக்கா, தற்போது ஜனநாயகத்திற்கான போராட்டங்களை சீனா அடக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியுள்ளது. அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியின் உச்சகட்டத்தில் அரசுக்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்ற முற்றுகைப் போராட்டங்கள் மீது அமெரிக்க அரசு கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளைப் பார்த்தவர்களுக்கு அமெரிக்காவின் இரட்டை நிலை புரியும்.

முதலாளித்துவ நாடுகளில் நடைபெறும் தேர்தல் முறைகளின் போலித்தனம் குறித்து சீன அரசின் ஊடகங்கள் வெளியிட்டுள்ள விமர்சனமும் கவனிக்கத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல்களில் அடுத்தடுத்து தில்லு முல்லுகள் அரங்கேறி வருகின்றன. அமெரிக்காவில் முழுக்க மின்னனுவாக்கு எந்திரங்களைப் பயன்படுத்தாது, ஒரு சில மாநிலங்களில் மட்டும் வாக்குச் சீட்டு முறைத் தேர்தல்கள் இன்றைக்கும் நடத்தப்படுகின்றன. தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு வாய்ப்பு இருக்கும் வகையில் இந்த இரட்டைமுறை எந்த தர்க்க நியாயமும் இல்லாமல் அங்கு தொடாரப்படுகிறது. அத்துடன் தேர்தலில் நிற்பதும் போட்டியிடுவதும் இரண்டு முதலாளித்துவக் கட்சிகளால் மட்டுமே முடியும் என்ற அளவிற்கு கடும் செலவுகளை உள்ளடக்கியதாக தேர்தல் நடைமுறைகள் அங்கு உள்ளன. மக்கள் கருத்துக்களை வடிவமைக்கும் ஊடகங்கள் முழுக்க முழுக்க முதலாளிகளின் கைகளில் உள்ளன. மாற்றுப் பிரச்சாரங்கள் அங்கு எடுபடா வண்ணம் மிக கவனத்துடன் கூடிய திட்டமிடலும் செயல்முறையும் அங்குள்ளது. எங்கள் கூறியதுபோல், 'சமத்துவமின்றி ஜனநாயகமும் சுதந்திரமும் கிடையாது' முதலாளித்துவ தேர்தல் முறையும் ஜனநாயக நெறிமுறைகளும் முதலாளித்துவத்தை கெட்டியாக பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்டவை. அவற்றை சோசலிச நாடான சீனாவின் மீது சுமத்தப் பார்ப்பது வீண் வேலை.

ஹாங்காங் என்பது சீனாவின் உள்நாட்டுப் பிரச்சினை. அதல் தலையிட யாருக்கும் உரிமையில்லை. அவாறு தலையிடுவது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனா கூறியுள்ளது நியாயம், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவுக்கும் பொருந்துமே. சீனா காட்டும் உறுதியை இந்தியாவும் காட்டவேண்டும்!

நன்றி தமிழக அரசியல்

Leave a Reply