ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திறங்கினார். தில்லி பாலம் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் பேட்டி அளித்தார். நான் 5 முறை இந்தியா வந்துள்ளேன். குறிப்பாக கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்தபோது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்த கையெழுத்தானது இன்னும் நினைவில் உள்ளது. கடந்த ஜூலைமாதம் பிரேசில் நாட்டில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் மோடியை சந்தித்தேன் அவர் உண்மையான நேர்மையான மனிதர், எனது 2 நாள் இந்திய சுற்றுப் பயணத்தின் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும்,

அதற்கான முன்னோக்கிய பாதையில் எங்கள் விவாதங்கள் அமையும் என்று எதிர்நோக்குகிறோம் இரு நாட்டுக்கிடையேயும் ராணுவம் மற்றும் தொழில்நுட்பம் ஒத்துழைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்தசந்திப்பு இருக்கும் என்றும் கூறினார்.

Leave a Reply