காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு நாளைக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். உருளைக் கிழங்கைவிட ஆறு மடங்கு அதிகம் கால்சியம் காரட்டில் உள்ளது. வளரும் குழந்தைகள் தினமும் காரட் சாறு குடித்தால், அது முழுமையான உணவாகும். கால்சியம் மற்றும் கரோட்டின் சத்துக்கள் நிறைய உள்ளன. கரோட்டீனை, கல்லீரல் வைட்டமின் 'ஏ' ஆக மாற்றிச் சேமித்துக் கொள்கிறது.

காரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும். சிறிதளவு உப்பு சேர்த்து காரட் சீவலுடன் சாப்பிட்டால் 'எக்சீமா' குணமாகும். கண்களின் நலத்தைக் காப்பதில் காரட்டிற்கு ஈடில்லை. 'டோகோகிளின்' என்ற ஹார்மோன் காரட்டில் உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

காரட் கெட்ட பாக்டீரியாக்களை, குடல்களிலிருந்து அளித்து வெளியேற்றுகிறது. குடல் நோய்களிலிருந்தும் காரட் சாறு காக்கிறது, குணமாக்குகிறது. குடல் புண்ணை ஆற்றுகிறது.

சிறுநீரகக் கோளாறுகளில், காரட் சாறு தரலாம். ஏனெனில், காரட் நல்ல நீரிளக்கி. சிறுநீர் சரியாகப் போகாதவர்களும் காரட் ஜூஸ் குடிக்க வேண்டும். உடலிலுள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை காரட் வெளியேற்றுவதால், மூட்டு வலி – கீழ்வாத நோய்கள் குணமாக உதவுகிறது.

பித்தப்பைக் கற்களைக் கரைப்பதுடன், கல்லீரல் கோளாறுகள், நெஞ்சக நோய்கள், சரியாக ரத்தம் வெளியேறாத மாதவிலக்கு ஆகியவற்றுக்கும் காரட் உண்பது நோயை குணப்படுத்தும் சிறந்த வழியாகும்.

காரட்டில் வைட்டமின் 'ஈ' உள்ளதால் மலட்டுத் தன்மையைப் போக்க மிகவும் உதவுகிறதாம். புற்றுநோய் 'செல்'களை ரத்தத்தில் உயிர்வாழாமல் செய்கிறது இந்த வைட்டமின் ஈ.

Tags:

Leave a Reply