தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய முன்னாள் உணவு மந்திரியுமான சரத்பவார் கடந்த வாரம் டெல்லியில் உள்ள தனது வீட்டில் நடைப் பயிற்சி மேற்கொண்டபோது தவறி கீழே விழுந்தார்.

இதனையடுத்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மும்பையில் உள்ள பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டார். சரத் பவாரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவருக்கு கடந்த 4-ம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அதே ஆஸ்பத்திரியில் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பவாரின் உடல்நிலை தேறி வருகிறது. நேற்று அவர் தனது 74-வது பிறந்த நாளை ஆஸ்பத்திரியிலேயே கொண்டாடினார்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா இன்று பிரீச்கேண்டி ஆஸ்பத்திரிக்குச் சென்று சரத் பவாரை சந்தித்து நலம் விசாரித்தார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங்கும் இன்று அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.

Leave a Reply