நரேந்திர மோடியை ஆட்சியில் அமர்த்தப்போகும் ஆங்கில புத்தாண்டே வா…. இந்தியாவை வறுமை– ஏழ்மையில் இருந்து மீட்டு வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லப்போகும் 2014 லே வா…

இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாய் நடத்திய "வெள்ளைக்காரியின்" ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போகும் "வெள்ளைக்காரனின்" ஆண்டே வா..

என்ன இவ்வளவு வா.வா. போடுகிறீர்கள் என்பதும், உங்களுக்கு ஒவ்வாத புத்தாண்டை "காவி ஆடை போர்த்தி" ஏன் வரவேற்கிறீர்கள் என்பதும், எங்களுக்கு தெரியாததது அல்ல என்று நீங்கள் கேட்பது புரிகிறது..

நடந்து முடிந்த நான்கு மாநில தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு மாபெரும் வெற்றியை அளித்து இருக்கிறார்கள்..

"நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் " என்பதுபோல மோடி போகும் இடமெல்லாம், நாடே–கூடி–ஓடி—வருகிறது –என்பதும் வெற்றி உறுதி ஆனதற்கு கொடுத்த அச்சாரம் ஆகும்..

தமிழ்நாட்டில், பாஜகவை வலுப்படுத்தும் "போன்னாரின்" கிராமம் செல்வோம்" நிகழ்ச்சியும்..மக்கள் அதற்க்கு கொடுத்துக்கொண்டிருக்கும் வரவேர்ப்பும் .." வெற்றிக்கனி எட்டும் தூரம்தான் " என்பதை எடுத்து இயம்புகிறது..

இதுவரை வரைபடத்தில் மட்டும் பார்த்துவந்த வளர்ச்சிப் பணிகளை தரை நிலத்திலும் பார்க்கப்போகும் ஆண்டு..

"வார்த்தைகளில் மட்டுமே"–வர்ணிக்கப்பட்ட முன்னேற்றத்தை "செயலிலும்" காணப்போகும் ஆண்டு..

"டீக்கான" ஒரே குடும்பம் ஆண்டுவந்த நாட்டை அதனிடமிருந்து மீட்டு, "டி விற்றவரிடம்"  ஒப்படைக்க போகும் ஆண்டு..

என்ற காரணங்களினால், 2014 ..லே..வா…. ஆங்கில புத்தாண்டே வா….
இங்கிலீஷ் காரனின் ஆண்டே வா….வா…வா….

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply