1947 ஆகஸ்டு, 15, அன்று நம் நாடு சுதந்திரம் அடைந்து, காங்கிரஸில் மகாத்மா காந்தி நேரு, ராஜேந்திர பிரசாத் – வல்லபாய் படேல் – ராஜாஜி போன்றவர்களால் வெற்றி பெற்ற சந்தோஷத்திற்குப் பின் 16.05.2014 அன்று வாக்கு எண்ணிக்கையில் பி.ஜே.பி. மத்திய அரசிலும் தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவும், மிக அதிக வாக்குகள் பெற்று மிகப்பெரும் வெற்றியையும், ஆட்சியையும் கைப்பற்றி உள்ளனர்.

இதற்கு காரணம் குஜராத்தின் உயர்ந்த நல்ல ஆட்சியும், மாற்றங்களும், தமிழகத்தின் நல்லாட்சியும் தான்!. 21-05-2014 அன்று நம் நாட்டின் 15-ம் பிரதமராக திரு. நரேந்திர மோடி இந்திய மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியாவின் மிக உயர்ந்த பதவியை ஏற்கிறார்.

இது 1984-ல் அமோக வெற்றி பெற்ற திரு.வாஜ்பேய்க்குப் பிறகு, இன்றைய மக்களின் கனவு நினைவானது.

மத்திய அரசில் பாராளுமன்றத் தேர்திலில் இடம்பெற, 543 இடங்களில் 272 இடங்கள் தேவை. ஆனால் அதற்கும் கூடுதலாக 333 இடங்கள் பெற்று தனிப்பெரும்பான்மையாக 283 தொகுதிகளிலும் வெற்றிபெற்று முன்னிலையில் நின்று வெற்றியைக் கைப்பற்றி பெருமிதத்துடன் ஆட்சி அமைக்கிறது பாரதீய ஜனதாக் கட்சி.

தமிழகத்திலும், அதிமுகவின் ஆட்சி மக்களைத் திருப்தியில் வைத்துள்ளதை 37 இடங்களின் வெற்றி உறுதி செய்துள்ளது.
பிஜேபி – வட இந்திய வதோராவில் ஐந்து லட்சம் வோட்டு வித்யாசத்தில் வென்று, காங்கிரஸின் கோட்டையை தகர்த்து – நாட்டின் ஊழல் – லஞ்சம் – வறுமை – மற்றும் பெண்களுக்கு சுதந்திரம், படிப்பறிவு இவைகளுடன் பாரத நாட்டின் வாழ்வாதாரமான, உணவு, வீடு, குடிநீர், மின்சாரம், பொருளாதாரம் மற்றும் கல்வி, தொழில் இவைகளை மேம்படுத்தி, மக்கள், நாட்டு வளர்ச்சியை உயர்த்தி ஒரு நல்லாட்சியை மத்தியிலும் – தமிழ் நாட்டிலும் உயர்த்துவது – புதிய பிரதமர், மற்றும் தமிழக முதல் மந்திரி அவர்களின் முக்கியமான பொறுப்பும், கடமையும் ஆகும்.

இவ்விரண்டு கட்சிகளும், தங்களது நல்லெண்ணங்களை செயலாக்கி வாக்குகளைப் பெற்று, ஆட்சியை மட்டும் பிடிக்க நினைக்காமல், இந்திய மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்புகளையும் ஏற்று, நல்ல எதிர்காலத்தை நிலைநாட்ட வேண்டும்.
நமது பாரதத்துக்கு ஏற்பட்ட களங்கங்களை நீக்கி நல்லாட்சியை மலரச் செய்ய வேண்டும்.

பா.ஜ.கவும், அதிமுகவும், அமோக வெற்றிபெற முக்கிய காரணம் அவர்களது நல்லெண்ணம், உழைப்பு, உண்மை, வளர்ச்சி, நாட்டின் அமைதி இவைகளை முன்வைத்ததால் தான்.

'மோடி அலை, லேடி அலை' (ஜெயலலிதா) இவைகள் சாதாரண அலையாக இன்றி 'சுனாமி'யாகவே உருவெடுத்து வெற்றி பெற்றுள்ளது!

வெட்டி வாதங்களுக்காக பேசப்பட்ட மதவாதம் என்பது பாஜகவைப் பொருத்தவரை மக்களுக்கு ஆற்றும் தொண்டுதான் என்பது கண் கூடு!

நல்ல வலிமை மிக்க பிரதமராக, நல்ல மந்திரிகளாக, நல்ல ஆட்சியாளர்களாக இந்தியாவை உயர்த்துவார்கள் என நம்புவோம். இந்தியா உயர, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம்மால் முடிந்த அளவு நமது உழைப்பையும் நல்குவோம்.

இனியேனும் மகாத்மா காந்தி, பாரதி இவர்களின் கனவுகள் நிறைவேற பிரார்த்திப்போம்!

அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு, அவர்களது அயராத உழைப்பிற்கும், அதிமுக மக்களின் நம்பிக்கையை மீண்டும், வெற்றியாகப் பெற்றதற்குமாக நம் அனைவரது நல் வாழ்த்துக்களையும் கூறுவோம்!

பா.ஜ.க, அதிமுக. கட்சிகளுக்காக மாதக் கணக்கில், பொருட் செலவை கணக்கிடாமல், பின்புலத்தில் கடுமையாக உடலால் – பேச்சால் – அலைந்து உழைத்த, இளைஞரணிகளுக்கும், தொண்டர்களுக்கும், நம்பிக்கையுடன் வோட்டளித்த வருங்கால இளைஞர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

திருமோடியின் வாக்குபடி இது இந்தியாவுக்கும், இந்திய இறையாண்மைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி!

வாழ்க பாரதம் – வந்தே மாதரம்!

நன்றி; ரேவதி

Tags:

Leave a Reply