தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள கிராமம் கண்ணத்தங்குடி. அதற்கு உள்வாயில் உள்ள குக்கிராமம் கீழயூர். இங்கே பிறந்து வளர்ந்த K.G.சாமி என்கிற K.கோவிந்தசாமி. சிறு வயதில் இருந்தே RSS தொடர்பு. படித்து பொறியியல் பட்டம் பெற்று சென்னை Ashok Leylandல் foremanஆக பணிபுரிந்தார். வேலையில் இருந்து கொண்டே சங்கப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 1969ல் முகல்சராய் ரயில்நிலையத்தில் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா படுகொலைக்குப் பின் நாடு முழுவதும் ஜனசங்கப் பணியை வலுப்படுத்த முழுநேர ஊழியராக பணிபுரிய அழைப்பு விடுத்தது தலைமை. அதனை ஏற்று குடும்ப சூழ்நிலை, எதிர்காலம் பற்றி யோசிக்காமல் சங்கத்திலிருந்து ஜனசங்கப் பணிக்கு வந்தவர்கள் TVS (பின்னாட்களில் ஹரிதா) ராமமூர்த்தியும், K.G.சாமியும். அபோதுதான் திரு.ஜனாஜியும் மதுரையில் தன் வழக்கறிஞர் தொழிலை முற்றிலும் துறந்து முழு நேர ஊழியரானார். திரு.சாமி, ஜனசங்கத்தின் மாநில செயலாளராக ஜனதாவில் merge ஆகும்வரை இருந்தார். பின்னர் BJP தொடங்கிய தினத்திலிருந்து 1990வரை 10ஆண்டுகள், சங்கர்ஜியுடன் மாநில பொதுசெயலாளராக செயல்பட்டார்.பெரம்பூரில் வீடு. பின்னர் இருவரும் ஜனகல்யாணில் சமூக தொண்டாற்றினர்.

5,6 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் சில காலம் வசித்தார். மனைவி காலமானார்.குழந்தை இல்லாத தம்பதியினர் ஒரு பெண் குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைத்தனர். 4ஆண்டுகளுக்கு முன் கீழையூரில் வசிக்கலானார்.
சென்ற ஆண்டு ஹரிதா ராமமூர்த்தி, வில்லிவாக்கம் வெங்கட்ரமணி போன்றோர் இணந்து பணமுடிப்பு சாமிஜிக்கு அளித்தனர். நேற்று காலை அந்த நல்ல மனிதர் மரணம் அடைந்தார். இறந்த பின்னும் சமுதாயத்திற்கு உதவும் விதமாக அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு அளிக்க வேண்டும் என்பது சாமிஜியின் அவா. அது போலவே இன்று காலை அந்த தியாகச் செம்மலின் உடல் தஞ்சாவூர் மருத்துவ பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டது.

பலபேரின் தவ வாழ்வால், தியாகத்தால் உருவானது பாஜக.அவற்றை மனதில் கொண்டு பணி செய்து கட்சியை வளர்ப்பது K.G.சாமி போன்ற நல்ல உள்ளங்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.

Leave a Reply