ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப் படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜன்தன் யோஜனா திட்டத்தை செயல் படுத்துவதில் தனித்துவமான சேவையை புரிந்த வங்கி ஊழியர்களை பாராட்டி அவர் களுக்கு கடிதம் எழுதியுள்ள பிரதமர் நரேந்திரமோடி, 99.74 சதவீத குடும்பத்தினர் இந்த திட்டத்தின்கீழ் வங்கி கணக்கை துவங்கி விட்டதாகவும் நிர்ணையிக்கபட்ட இலக்கைவிட இந்த எண்ணிக்கை தாண்டியுள்ளதாகவும் மேலும் பல திட்டங்களில் நேரடியாக பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதை விரிவுபடுத்துவதை அரசு உறுதிப் படுத்தும் என்று தெரிவித்தார்.

வங்கி ஊழியர்களுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:-

பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதில் உங்களின் அசாதாரண உழைப்பை பார்க்கையில் எனக்கு மிகுந்தமகிழ்ச்சி அளிக்கிறது. இந்ததிட்டம் 26 ஜனவரி 2015 ஆம் ஆண்டில் நிறைவேற்ற நிர்ணையிக்கப்பட்டிருந்த இலக்கைவிட கடந்துள்ளது. மிக குறுகிய காலத்திற்குள் 11.5 கோடி புதிய வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 99.4 சதவீத குடும்பத்தினரை இந்ததிட்டம் இணைத்துள்ளது. உங்களின் தனித்துவமான உழைப்பிற்காக உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதார் கார்டுடன் ஓவ்வொருடைய வங்கிகணக்கு எண் பதிவு செய்வதை உறுதிப்படுத்த நீங்கள் உழைக்க வேண்டும். இது அனைத்து வங்கிகணக்கு எண்ணுக்கும் செயல்படுத்த வேண்டும். வங்கிகணக்கு தொடங்குவதில் காட்டிய அதே ஆர்வத்தோடு இதிலும் நீங்கள் முனைப்புடன் செயல்படுவீர்கள் என நான் நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Leave a Reply