வெற்றி என்பது பெற்றுக்கொள்வதற்காக , தோல்வி என்பது கற்றுக் கொள்வதற்காக என்கிற கவிஞர் வைரமுத்துவின் கவிதை அவர் சார்ந்த ஊழல் தி.மு.க.,வுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ பொருந்தாது , ஆனால் சிறு சிறு தவறுகளால் டெல்லியில் பெரும் தோல்வியை தழுவியுள்ள பாஜக.,வுக்கு சாலப்பொருந்தும் என்றே கூறவேண்டும்.

டெல்லியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது, பாஜக வெறும் மூன்று தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது , காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியடைந்துள்ளன. இதில் காங்கிரசால் 63 தொகுதிகளில் டெபாசிட்டை கூட பெற முடியவில்லை.

ஆம் ஆத்மிக்கு இது மாபெரும் வெற்றி, பாஜக.,வுக்கு எதிர்பாராத பெரும் தோல்வி இதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை. இருப்பினும் பாஜக வெற்றி மேல் வெற்றி பெரும்போதே அதை ஏற்றுக்கொள்ளாமல் மாபெரும் விமர்சனங்களை மோடியின் மீது சுமத்தி வந்த எதிர்க்கட்சிகள் இப்போது சும்மா இருக்குமா?. மோடியின் செல்வாக்கு குறைந்து விட்டது. மோடி அலை ஓய்ந்து விட்டது. இனி இந்தியா முழுவதும் இதே நிலைதான் என்று வழக்கத்தை விட கூடுதலாக விமர்சிக்க தொடங்கி விட்டனர்.

அப்படி என்றால் 49 நாள் ஆம் ஆத்மியின் ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்களா?, டெல்லி தர்பார் என்று கூறிவிட்டு அதை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு ஓடியதை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?. ஒரு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்பதற்காக ஆட்சியை விட்டு ஓடியதை ஏற்றுக்கொண்டு விட்டார்களா?.

அதேபோன்று பாஜக.,வின் 8 மாத ஆட்சியில் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் எந்த ஒரு திட்டமோ, ஊழலோ, நடந்து விட விலையே. பெட்ரோல், டீசல், கேஷ் விலைகளும் , பண வீக்கமும் குறைந்து கொண்டு வருகிறதே, எதிர்கால வளர்ச்சிக்கான அணைத்து கட்டமைப்பு பணிகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறதே. அந்நிய நாடுகளின் மத்தியில் இந்தியாவின் கை ஓங்கியுள்ளதே. அந்நிய நாடுகளில் கூட இந்தியாவுக்கு சாதகமான ஆட்சியை கொண்டுவர முடியும் என்பதை இலங்கை தேர்தல் முடிவுகள் மூலம் மோடி நிருபித்துல்லாறே.

ஆகமொத்தத்தில் கேஜ்ரிவாளின் 49 நாள் ஆட்சியில் போற்றுவதற்கு ஒன்றும் நடைபெறவும் இல்லை, மோடியின் 8 மாத ஆட்சியில் தூற்றுவதற்கும் ஒன்றும் இல்லை. இருப்பினும் பாஜக.,வின் சிறு சிறு தவறுகளும், ஆம் ஆத்மியின் விறு விருப்பான ஆறுமாத தேர்தல் பிரச்சாரமும் , எதிர் கட்சிகள் அனைத்தும் மொத்தமாக தங்கள் ஓட்டை மடை மாற்றி விட்டதும், தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் வழிபட்டு தளங்களை விஷமிகள் சிலர் தாக்கி அதை பாஜக.,வின் மீது சுமத்தி சிறுபான்மையினர் ஓட்டுகளை மொத்தமாக அல்ல முயன்ற முயற்சியில் வெற்றி பெற்றதும். அதை பாஜக கடைசி வரை உணராமல் கோட்டை விட்டதும். இதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் மோடி அலையை மட்டுமே முன்னிறுத்திய பாஜக டெல்லியில் மட்டும் கிரேன்பேடி அலையையும் சேர்த்து எழுப்ப முயன்றதும் என்று சுய விமர்சனங்கள் சிலவற்றை கூறிக்கொண்டே செல்லலாம்.

இருப்பினும் எதிர்கட்சிகள் கூறுவதை போன்று மோடி அலை ஓய்ந்துவிடவும் இல்லை, பாஜக மக்கள் செல்வாக்கை இழந்துவிடவும் இல்லை. கடந்த 2013ம் ஆண்டு சட்ட சபை தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி , காங்கிரஸ் முறையே 33.3 சதவிதம், 29.7சதவிதம் , 24.7 சதவிதம் வாக்குகளையும், பாஜக 31, ஆம் ஆத்மி 28 , காங்கிரஸ் 8 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன.

தற்போது பாஜக, ஆம் ஆத்மி , காங்கிரஸ் முறையே 32.20 சதவிதம், 54.20 சதவிதம் , 9.80 சதவிதம் வாக்குகளையும், பாஜக 3, ஆம் ஆத்மி 67 , காங்கிரஸ் 0 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. பாஜக தனது வாக்கு வங்கியில் ஒரு சதவிதம் மட்டுமே சறுக்கியுள்ளது. ஆனால் அதற்காக அது இழந்த தொகுதிகள் மட்டும் 28 ஆகும். மேலும் காங்கிரஸ் தனது 15 சதவித வாக்கு வங்கிகளை ஆம் ஆத்மியிடம் மறைமுக கூட்டணியின் மூலம் தாரைவார்த்துள்ளது. இதன் மூலம் எதிர்கட்சிகள் பாஜக.,வை தற்காலிகமாக வீழ்த்த தங்களை தற்கொலை செய்து கொண்டு ஆம் ஆத்மியை காப்பாற்றியுள்ளது.

கடந்த ஒரு வருடமாக ராஜஸ்தான் , மத்திய பிரதேஷ் , மகாராஷ்டிரா, ஹரியான, ஜார்கண்ட் , சத்தீஸ்கர், ஜம்மு காஸ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக.,வுக்கு டெல்லிதேர்தல் முடிவு சரிபடுத்த கூடிய பெரும் சரிவே. இதை டெல்லி தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்பு நடந்த ஜம்மு காஷ்மீர், ஜார்கண்டில் பாஜக பெற்ற பெரும் வெற்றிகளும் , டெல்லி தேர்தல் முடிவுக்கு பின்பு வந்த அஸ்ஸாம் உள்ளாட்சி தேர்தல் வெற்றிகளும் தெளிவாக காட்டுகிறது.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply