மத்திய அமைச்சர் பியூஸ்கோயல், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துபேசினார். இந்த சந்திப்பின் போது, மத்திய அரசின் உதவியுடன் தமிழகத்தில் செயல் படுத்தப்பட உள்ள மின் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடந்தது.

இந்த சந்திப்புக்குபின் பேசிய பியூஸ்கோயல், கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக நூறுமெகாவாட் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

இந்தியாவி லுள்ள குறிப்பாக விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் போதுமான மின்சாரம்கிடைக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன்மூலம், நாட்டில் விவசாய உற்பத்தியை அதிகரிக்க செய்யமுடியும்.

வட மாநிலங்களில் இருந்து தென்மாநிலங்களுக்கு மின்சாரத்தை அளிப்பதற்கு தேவையான வசதிகளை அதிகரிக்க வேண்டியது அவசியம்.

அதன்படி, கூடுதல் மின் பகிர்மான வசதிகளை அமைக்க மத்திய அரசு ரூ.30 ஆயிரம் கோடி முதலீடுசெய்யும். இந்த முதலீடுகள் அடுத்த இரண்டரை அல்லது மூன்று ஆண்டுக ளுக்குள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புறங்களில் வசிப்போருக்கும், குறிப்பாக விவசாயி களுக்கும் மின்சாரம் அளிக்கும் திட்டத்தை மத்தியஅரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் பயன் பெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். இதற்கென, ரூ.1,000 கோடி நிதியுதவி அளிக்கப்படும்.

மேலும், நகர்ப் புறப் பகுதிகளுக்கு மின் சாரத்தை ஒருங்கிணைத்து அளிக்கும் வகையில், ஒருங்கிணைந்த மின்சார மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், 9 நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டு ரூ.363 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை வெற்றி கரமாகச் செயல்படுத்து வதற்காக ரூ.1,051 கோடியை அளிக்க 13-வது நிதிக்குழு பரிந்துரைகளை அளித்துள்ளது. இந்த பரிந்துரைகளை ஏற்று அந்தத்தொகை இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்

Leave a Reply