நிர்பயா பாலியல் குற்றவாளிகள் குறித்த ஆவணப் படத்தை எடுக்க பிபிசி ஊடக குழுவுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசு கண்மூடித்தனமாக அனுமதி அளித்துள்ளது.

பிபிசி ஊடக குழுவுக்கு அரசு அனுமதி அளித்தபோது, கருத்தில் கொள்ளவேண்டிய காரணிகளையும், அந்த ஆவணப் படத்தின் எழுத்துப் பிரதியையும் (ஸ்கிரிப்ட்) சரிபார்க்காமல் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் தற்போது, உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எடுத்துள்ள நடவடிக்கைகள் உறுதியானவை. இதுபோன்ற படங்களை எடுக்க, வெளி நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருபவர்கள், இந்திய சூழலையோ, பிரச்னைகளையோ கருத்தில் கொள்வதில்லை.

தங்கள் படங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்களும், பிறரை தரக் குறைவாக சித்தரிக்கும் அம்சங்களும் இடம்பெறுவது பற்றியும் கவலை கொள்வதில்லை.

ஒரு படத்தைத் தயாரிக்கும் போது அது, பிறரின் உணர்வுகளை காயப்படுத்தும்படி இருக்கக் கூடாது என்ற நெறிமுறையையும் அவர்கள் மதிப்பதில்லை. ஆனால், நம்மைப் பொருத்த வரை இந்த விவகாரம் நாட்டின் கெüரவம், உணர்வு சம்பந்தப்பட்டதாகும் என்று நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்தார்.

Leave a Reply