இலங்கை அனுராத புரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மகாபோதி மரத்தின் அடியில் பிரதமர் மோடி மலர் தூவி வழிபாடு நடத்தினார். இலங்கை பயணத்தின் 2வது நாளாக இன்று மோடி தமிழர் பகுதியில் நடை பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதற்காக கொழும்பில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட மோடி அனுராத புரத்தில் உள்ள மகாபோதி ஆலயத்தில் வழிபாடு நடத்தினார். இந்த ஆலயத்தில் உள்ள மகா போதி மரத்தையும் மோடி மலர்தூவி வழிபட்டார்.

கவுதமபுத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தில் இருந்து உருவான இந்த போதிமரம் இந்தியாவின் புத்தகையாவில் இருந்து மன்னர் அசோகரின் மகள் சங்கமித் திராவால் இலங்கை அனுராத புரத்திற்கு எடுத்த செல்லப்பட்டதாகும். இந்த மரத்தடியில் சுமார் 5 நிமிடங்கள் நின்று பாரம்பரிய முறைப்படி வழிப்பட்ட மோடி மற்றும் இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு புத்தமத துரவிகள் கையில் கயிறு கட்டி ஆசி வழங்கினர்.

இது குறித்து மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் அனுராத புரம் போகிறேன், அத்துடன் தலை மன்னார் மற்றும் யாழ்ப் பாணத்திற்கும் இன்று செல்லவுள்ளேன். இன்றைய நாள் மிகவும் சிறப்பான நாளாக அமையும் என எதிர் பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Leave a Reply