மாநிலம் முழுவதும் விவசாயிகளின் அடையாள அட்டையில் ஆதார் எண்ணையும் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் 2011ல் பண்ணை பயிர் மேலாண்மை திட்டத்தை, தமிழகஅரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம்

அனைத்து விவசாயிகளின் பெயர், நிலத்தின் அளவு, மண்ணின்தரம், என்னென்ன பயிர்கள் விதைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கணினியில் சேகரித்து விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள், விதைகள், செடி மற்றும் பயிர்களுக்கு தேவையான உரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு, விதை, உரங்கள் மற்றும் பல இடு பொருள்களை வழங்கி, ஆன்லைன் மூலம் பில்வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயி பெயரை பயன் படுத்தி, மற்றவர்களும் உரம் மற்றும் விதைகளை வாங்கிசெல்கின்றனர். இதை தடுக்கும் வகையில் விவசாயிகளின் அடையாளஅட்டையில் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண்மைதுறை அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வட்டார விரிவாக்க மையங்களில் சென்று விவசாயிகள் தங்களது ஆதார் எண்ைண சேர்க்கவேண்டும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply