குஜராத் ரதயாத்திரையை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துதெரிவித்தார். இது தொடர்பாக, அவர் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்டபதிவில் கூறியிருப்பதாவது:

குஜராத்தில் நடைபெறும் பகவான் ஜெகந் நாதரின் 138-வது ரதயாத்திரை குறித்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பகவான் ஜெகந்நாதரின் அருளால் சமுதாயத்தில் அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலவட்டும். அவருடைய கிருபையால் ஏழைமக்களும், விவசாயிகளும் சுபிட்சமடையட்டும்.

ரதயாத்திரை போன்ற பாரம்பரிய நிகழ்ச்சியானது, இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தற்போது, இந்நிகழ்ச்சி உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது.

குஜராத் முதல்வராக நான் இருந்த போது, பகவான் ஜெகந் நாதரின் ரதம் பயணிக்கும் சாலையை சுத்தப்படுத்தும் "பாஹிந்த் வீதி' என்னும் சடங்கு நிகழ்ச்சியில் 12 ஆண்டுகள் பங்கேற்றேன் என்று மோடி குறிப்பிட்டுள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெற்ற ரத யாத்திரையின் "பாஹிந்த் வீதி' நிகழ்ச்சியில் தாம் பங்கேற்ற புகைப்படங்களையும் அந்தப்பதிவில் மோடி வெளியிட்டுள்ளார்.

Leave a Reply