மத்தியவேளாண் மந்திரி ராதா மோகன் சிங் நேற்று முன்தினம் டெல்லி மேல்சபையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அப்போது, 'விவசாயிகளின் தற்கொலைக்கு காதல்விவகாரம், வரதட்சணை, ஆண்மைக் குறைவு, குடும்ப பிரச்சினைகள், வியாதி, போதைபழக்கம், வேலையின்மை, சொத்து தகராறு, பணி தொடர்பான பிரச்சினைகள், திருமணம் நின்றுபோதல், பெயர் கெட்டுப்போதல் மற்றும் வெளியேதெரியாத காரணங்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது' என்று கூறினார்.

அவரது கருத்து பெரும் சர்ச்சையை உண்டாக்கி . எதிர்க்கட்சி தலைவர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி, வேளாண் மந்திரிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். சமூக வலைத் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும், விவசாயிகள் தற்கொலைக்கு பாராளு மன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 30ந் தேதி, அப்போதைய வேளாண் இணைமந்திரி சரண்தாஸ் மகந்த், டெல்லி மேல்சபையில் அளித்த பதிலில், விவசாயிகள் தற்கொலைக்கு காதல் விவகாரத்தையும் காரணமாக கூறினார்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, அப்போதைய மத்தியவேளாண் மந்திரி சரத் பவார், மக்களவையில் அளித்த பதிலில், விவசாயிகள் தற்கொலைக்கு காதல்விவகாரம், வேலையின்மை, சொத்து தகராறு, திடீரென வறுமைநிலைக்கு தள்ளப்படுதல், பணிபிரச்சினைகள், ஆண்மைக் குறைவு, திருமணம் நின்று போதல், வரதட்சணை தகராறு, பெயர் கெட்டுபோதல் ஆகிய காரணங்களை கூறினார்.

2014-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந்தேதி, அப்போதைய மத்திய வேளாண் இணைமந்திரி தாரிக்அன்வர், டெல்லி மேல்சபையில் அளித்த பதிலில், விவசாயிகள் தற்கொலைக்கு இதே காரணங்களை தெரிவித்தார்
என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Leave a Reply