தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று புழல்சிறைக்கு சென்று, அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களை சந்தித்து ஆறுதல்கூறினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாணவர்களை போராட்டத்துக்கு வைகோ தூண்டிவிடுகிறார். மாணவர்களை தூண்டிவிட்டு போர்க்களத்துக்கு வரவைப்பது நல்லதல்ல. அறவழியில் போராட்டம் நடத்தப்படவேண்டும். வன்முறையாக இருக்கக் கூடாது. தற்போது தமிழகத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

உடனடியாக தமிழகத்தில் இயங்கி வரும் மதுக்கடைகளை மூடவேண்டும். வருகிற 10-ந்தேதி தமிழக பா.ஜ.க சார்பில் பெரியபோராட்டம் நடத்த இருக்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply