பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் 4 பேர் இன்று பா.ஜ.க.,வில் இணைந்தனர்.

மத்திய அமைச்சர் ராஜீவ்பிரதாப் ரூடி, மற்றும் மாநில தலைவர் மங்கள் பாண்டே முன்னிலையில் இன்று பா.ஜ.கவில் இணைந்த கஜேந்திரசிங், ஞான ராஜேஸ்வர் ராஜ், தினேஷ் குஷ்வாகா, மற்றும் சுரேஷ் சந்சல் ஆகிய 4 பேரும் சட்டப் பேரவையில் கலகம்செய்ததால் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து அவர்கள் இன்று பா.ஜ.கவில் இணைந்தனர். மேலும் ஐ.ஜ.தளம் கட்சியில் இருந்து இன்னும் பலர் பா.ஜகவில் இணைவார்கள் என மாநிலதலைவர் மங்கள் பாண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Leave a Reply