பிகார் மக்கள் மிகச்சிறந்த அறிவாளிகள் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினார். மேலும், பிகார் சட்டப் பேரவை தேர்தலையொட்டி நிதீஷ்குமாரும், லாலு பிரசாத்தும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் கைகோத்துள்ளதன் மூலம், ராம்மனோகர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயண் ஆகிய தலைவர்களின் கொள்கைகளை அவர்கள் குழிதோண்டி புதைத்து விட்டனர்

ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் பிகாரில் கடந்த 25 ஆண்டுகளாக, இனவாத-ஜாதிய அரசியலைத் தான் நடத்தி வருகின்றன. இதனால் தான் பிகார் இன்னும் பின்தங்கிய மாநிலமாகவே உள்ளது. இதனை பிகார் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மிகச்சிறந்த அறிவாளிகளான அவர்கள், தங்களது மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, எதிர்வரும் பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டனர். எனவே, தேர்தலில் எங்களது கூட்டணியின் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாது.

ராம் மனோகர் லோஹியா, காங்கிரஸ் கொள்கைகளுக்கு எதிராக போராடியதையும், ஜெயபிரகாஷ் நாராயணை அப்போதைய காங்கிரஸ் அரசு சிறையில் தள்ளியதையும் அவர்கள் (நிதீஷ், லாலு) மறந்து விட்டனர். இதற்காக, தேர்தலில் அவர்களுக்கு பிகார் மக்கள் தக்கபாடம் புகட்ட வேண்டும்.

பிகார் மாநிலத்துக்கு அண்மையில் நான் ரூ.1.25 லட்சம் கோடி சிறப்பு நிதியை அறிவித்தேன். இதனை, நிதீஷ் குமார் ஏளனத்துடன் விமர்சித்தார். ஆனால், தற்போது தேர்தலை கருத்தில் கொண்டு அவர், தனது சொந்த மாநிலத்துக்கு ரூ.2.7 லட்சம் கோடி சிறப்பு நிதியை அறிவித்துள்ளார். எனக்கு போட்டியாக நிதீஷ் குமார் இவ்வாறு அறிவித்து, பிகார் மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார். ஆனால், அவரது இந்த அறிவிப்பின் உள்நோக்கத்தை பிகார் மக்கள் நன்கு அறிவார்கள் என்றார் மோடி.

Leave a Reply