குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா நேற்று நடந்தது. விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிபேசிய அமித் ஷா, ‘நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ளமுடியாது எனவும் இந்திய எல்லையில் அத்துமீறலை அனுமதிக்க முடியாது எனவும் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி, , ’21-ம் நூற்றாண்டின் இரும்புமனிதர் அமித்ஷா அவரது திறமையை கண்டுதான் வியப்படைவதாகவும் கூறினார். மேலும், அமித்ஷா என்ற எழுச்சிமிக்க தலைவரை பெற்றதற்காக குஜராத்தும், இந்தியாவும் பெருமை கொள்வதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

Comments are closed.