அசாமில்  கலவரம்  பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு அசாமில் கோக்ராஜ்கர், சிரங் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம்களுக்கும், போடோபழங்குடி இன மக்களுக்குமிடையே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு திடீரெனமோதல் வெடித்தது .

இதில் பழங்குடி இன மக்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதை

தொடர்ந்து இந்த மோதல் மிக பெரும் இன கலவரமாக வெடித்தது. கடந்த மூன்று நாட்களாக நடந்த வன்முறையில் பலி எண்ணிக்கை 21 ஆக_உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .

வன்முறை நீடிப்பதினால் கிராமங்களில் வாழும்மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர், ஏராளமாநோர் உயிருக்கு பயந்து வீடுகளை காலி செய்துவிட்டு அடர் காடுகளுக்குள் பாதுகாப்புதேடி சென்று விட்டனர். கலவரம் மற்றபகுதிகளுக்கு பரவு வதை தடுப்பதற்க்காக கூடுதல் ராணுவபடை அசாம் மாநிலத்துக்கு அனுப்பட்டுள்ளது.

Leave a Reply