நவம்பர் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்; பொன் ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நிலக்கரி ஊழல், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி, விலையேற்றம் உள்ளிட்ட மக்கள் விரோதசெயல்களில்

மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதனிடையில் நவம்பர் 22-ம் தேதி நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கூட இருக்கிறது . இத்தொடர் கூடுவதற்கு முன்பு மக்களிடையே ஊழல், விலைவாசி உயர்வு குறித்து எடுத்துரைக்க பாஜக முடிவு செய்துள்ளது.

அதன்படி நாடுமுழுவதும் வரும் 21-ந்தேதி மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டங்களை நடத்த பாஜக தேசிய தலைமை முடிவெடுத்திருக்கிறது . தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் வரும் 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply